பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு:முதலமைச்சரை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்!

author img

By

Published : May 24, 2023, 7:33 PM IST

தமிழ் நாட்டிற்கு பாராட்டு தெரிவித்த சிங்கப்பூர் அமைச்சர்

வழக்கமான முதலீடுகள் தவிர டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் நோக்கத்திலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிங்கபூர் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து ஜப்பான் செல்லவுள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று, அங்குள்ள Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறிய அவர், தமிழ்நாட்டில் வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை நேரில் சந்தித்த முதலமைச்சர், இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் கலந்துறையாடினர்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானிய பயிர்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்!

அதனை தொடர்ந்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர், தமிழ்நாடு மேற்கொள்ளவுள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதலீடு ரிதியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, இச்சந்திப்பின்போது, அமைச்சர் ஈஸ்வரன் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது எனவும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் எடுத்துறைத்தார்.

மேலும் வரும் அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள Fintech மாநாட்டில் தமிழகம் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட ஈஸ்வரன் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் தமிழ அரசுக்கு தனது வாழ்த்துக்களையும் தேரிவித்துள்ளார்.

முதலமைச்சரக்கு சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன் இன்று வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, திமுக "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்" என்ற கொள்கையிலேயே மும்மூரம் காட்டி வருவதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களை முன்வைத்து விமர்சித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சி குறித்து குறை கூறுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 19 பேர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.