ETV Bharat / state

தஞ்சையில் டிச.1 முதல் ஆவின் பால் விற்பனை நிறுத்தம் - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 1:58 PM IST

தஞ்சை ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
பால் கொள்முதல் பற்றாக்குறை காரணமாக ஆவின் பால் விற்பனை நிறுத்தம்

aavin milk packets to be stopped at Thanjavur: தஞ்சாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்டங்களில் ஆவின் நிறை கொழுப்பு பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக அம்மாவட்ட ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து முகவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை: பால் கொள்முதல் பற்றாக்குறை காரணமாக தஞ்சாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆவின் நிறை கொழுப்பு பால் 250 மிலி பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக முகவர்களுக்கு இன்று (நவ.29) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. அரசு சார்பில் ஆவின் நிறுவனம் வாயிலாக 225க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் தயாரிப்புகளான மோர், ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகிய பொருட்களையும் அனைத்து தரப்பினரும் அதிகம் விரும்புகின்றனர்.

ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில், அந்தந்த தரத்திற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கும், பச்சை நிற பால் பாக்கெட் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும், அதேபோல் 250 மில்லி லிட்டர் கொண்ட பச்சை நிற பால் பாக்கெட் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மேல்மா சிப்காட்டை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடும் சரிவைச் சந்தித்து வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், பால் கொள்முதல் பற்றாக்குறை காரணமாக தஞ்சாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் விநியோகம் செய்யப்படும் ஆவின் நிறை கொழுப்பு பால் 250 மிலி பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த பால் பாக்கெட்டை நிறுத்துவதாக தஞ்சை மாவட்ட ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து பால் முகவர்களுக்கு இன்று (நவ.23) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை பகுதிகளில் ஆவின் பால் பாக்கெட்டுகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவினுக்கான பால் கொள்முதல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடும் சரிவைச் சந்தித்து வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம், அதற்கான தரவுகளோடு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், உண்மையை பொய் என்று கூறி வரும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தற்போது என்ன சொல்லப் போகிறார்?

பால் கொள்முதல் பற்றாக்குறை காரணமாக தஞ்சாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்டங்களில் விநியோகம் செய்யப்படும் ஆவின் நிறைகொழுப்பு பால் 250மிலி பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நிறுத்துவதாக தஞ்சை மாவட்ட ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து பால் முகவர்களுக்கு இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும்போது, ஆவினுக்கு இறுதிப்பயணத்தை தயார் செய்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்பாசி சட்ட விவகாரம்; கோவையில் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.