ETV Bharat / state

சிறைவாசத்தில் புது வாசம் காணும் புழல் சிறை பெண் கைதிகள்.. சட்டத்துறையின் புதிய முயற்சி என்ன?

author img

By

Published : Jun 26, 2023, 10:29 PM IST

நாட்டிலேயே முதல்முறையாக சிறைப் பெண்களால் இயக்கப்படும்  பெட்ரோல் பங்க்
நாட்டிலேயே முதல்முறையாக சிறைப் பெண்களால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்

நாட்டிலேயே முதன்முறையாக புழல் பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக சிறைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக சிறைப் பெண்களால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் விரைவில் அறிமுகப்படுத்த சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக சிறைத்துறையின் கீழ் ஒன்பது மத்தியச் சிறைகளும், 14 மாவட்ட சிறைகளும், ஐந்து பெண்கள் சிறப்புச் சிறைகள் உட்பட மொத்தம் 142 சிறைகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்குப் படிப்பு, தொழில் எனப் பல வசதிகள் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பிறகு சிறை கைதிகளுக்காகப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இன்டர் காம் வசதி, ஆதார் கார்டு வழங்கும் திட்டம், ஆபத்தான குற்றவாளிகளைக் கண்காணிக்கச் சுற்றுக்காவல் செல்லும் காவலர்களுக்குப் பாடி வொர்ன் கேமராக்கள், பெரிய வாஷிங் மெஷின்கள், சிறைச்சந்தை என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் புழல் சிறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் புழல் பெண்கள் தனிச் சிறை அருகே உள்ள அம்பத்தூர் சாலையில் 1.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் மற்றும் எக்ஸ்பி 95 ,இன் 5 விநியோக பிரிவுகளைக் கொண்டதாகவும், புழல் பெண்கள் தனிச் சிறையில் உள்ள 30 பெண் சிறைவாசிகளைக் கொண்டு இந்த பெட்ரோல் பங்க் செயல்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெட்ரோல் பங்க் 20kl பெட்ரோல், 20kl எக்ஸ்பி 95 மற்றும் 40kl கொள்ளளவு கொண்டதாகவும், freedom filing station unit -ii கட்டுமான பணியுடன் சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை நிலையமான சிறைச்சந்தையும் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நிறைவடைய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கின் கட்டுமானப் பணியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதே போலச் சிறைவாசிகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களைச் சீர்திருத்தி அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து விடுதலைக்குப் பின் சமூகத்தில் குற்றச் செயல்களில் மீண்டும் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் சிறைத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களைச் சீர்திருத்தம் செய்யும் சிறைகளில்“கலை” என்ற புதிய திட்டம் சிறைத் துறையால் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சிறைவாசிகளுக்கு ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகளை வழங்குவதாகவும் இந்த ஆறு மாத கால பயிற்சியில் பட்டப்படிப்பு பயிற்சி சான்றிதழும் வழங்கப்படுவதாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறைகளில் கலை என்ற திட்டத்தில் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சுமனசா அறக்கட்டளையும் இணைந்து பயிற்சி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உள்ளிட்ட அதிகாரிகளால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடிக்குறாங்க, அடிக்குறாங்க; நெல்லையில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.