ETV Bharat / state

சேலம் எட்டு வழிச்சாலை, தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

author img

By

Published : Jun 19, 2021, 7:15 PM IST

velu
velu

சேலம் எட்டுவழிச்சாலை குறித்த நிலைப்பாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை: நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்,பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடைற்ற இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு கூறியதாவது, "அரசின் சார்பாக கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகதான் கட்டப்படுகிறது. கட்டடங்கள் கட்டுவதற்கு ஏற்படும் காலதாமதம் குறித்த ஆய்வு மேற்கொண்டதில் ஒப்பந்ததாரர்களுக்கு சில குறைகள் உள்ளது. எனவே அவர்களின் குறைகளை கேட்கவே இந்த கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினோம். தற்போதைய ஒப்பந்த முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டுமென ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு 4,5 முறை கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஒப்பந்தப்பணி முடியும் போது நஷ்டம் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். இஇதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சரிடம் தெரவிப்போம். இந்த அரசாங்கம் வெளிப்படைத்தன்மையாக செயல்படும். சேலம் எட்டுவழிச்சாலை குறித்த நிலைப்பாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்" என அமைச்சர் வேலு கூறினார்.

இதையும் படிங்க: அண்ணா நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பாராட்டியது போல் கலைஞர் நூலகம் இருக்க வேண்டும் - எ.வ. வேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.