ETV Bharat / state

கூடுவாஞ்சேரி என்கவுண்டர் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:55 PM IST

madras high court orders transfer the Guduvancheri encounter case to cbcid investigation
என்கவுண்டர் விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிமன்றம்

fake encounter case: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் காவல் துறை என்கவுண்டரில் இருவர் கொல்லப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்கின்ற இரண்டு ரவுடிகளும் காவல் துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இருவரும் சிறுசேரியில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் உணவகத்தில் இருந்து அழைத்துச் சென்று என்கவுண்டரில் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரவுடிகள் மீது காவல் துறை நடத்திய என்கவுண்டரை, போலி என்கவுண்டர் எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!

எனவே, இது குறித்து செங்கல்பட்டு மாஜேஸ்ட்ரேட் முழு விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (செப்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவல் துறை என்கவுண்டர், லாக் அப் மரணம் உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, மேலும் இந்த வழக்கை டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிஙக: நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கு விவகாரம்; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.