ETV Bharat / state

LGBTQI+ வரைவு சமூக நீதிக்கு எதிரானது - திருநங்கைகள் கூட்டமைப்பு சங்கம் கொந்தளிப்பு

author img

By

Published : Jul 28, 2023, 5:10 PM IST

lgbtq-definition-is-against-social-justice-transgender-federation-association-turmoil
lgbtqI-definition-is-against-social-justice-says transgender-federation-association-turmoil

LGBTQI+ என்ற சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஒரே வரைவுக்குள் உருவாக்குவது என்பது சமூக நீதிக்கு எதிரானது என சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.

சென்னை : LGBTQI+ மக்களுக்கு ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு வரைவு கொண்டு வருவது சமூக நீதிக்கு எதிரானது எனவும்; திருநங்கைகளுக்கு தனியாக இடஒதுக்கீடு மற்றும் தனிக்கொள்கை வகுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு பேசுகையில், ''கடந்த சட்டப்பேரவை நிகழ்வின் சமூகநலத்துறை மானியத்தின்போது திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை திருநங்கைகள் நடத்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இடஒதுக்கீடு வழங்குவதற்காக (LGBTQI POLICY) என்ற புதிய வரைவுக் கொள்கையை உருவாக்க அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வரைவை 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர்.

LGBTQI+ என்ற சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஒரே வரைவுக்குள் உருவாக்குவது என்பது சமூக நீதிக்கு எதிரானது. பல வருடங்களாக கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும் என திருநங்கை சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களில் நடத்தி கோரிக்கை விடுத்திருக்கிறோம். மேலும் நாங்கள் அடிமட்டத்தில் இருக்கும் சமூகம். மேலும் LGBTQI+ மக்களின் வாழ்வியல் உரிமை, தேவை என்பது வேறு, திருநங்கைகளுக்கான வாழ்வியல், உரிமை, தேவை என்பது வேறு.

நாங்கள் சமூகத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்படுகிறோம். மேலும், கல்வி, வேலை, சமூகத்தில் பயணிக்க பல சவால்களை எதிர்கொள்கிறோம். பெண்மை என்ற உணர்வு வந்தவுடன் முதலில் வீட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்ட நாங்கள், உடல் ரீதியாகவும் ஒரு சில விஷயங்களை மாற்றம் செய்கின்றோம். ஆனால், LGBTQI+ மக்கள் இயல்பு வாழ்க்கை வந்து கொண்டிருக்கின்றனர். சமுதாயத்தில் எங்கள் அளவிற்கு அவர்களுக்கு சவால்கள் இல்லை. அவர்களை இந்த வரைவில் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.

ஒரே வரையறைக்குள் LGBTQI+ அனைத்து மக்களையும் இணைக்கும் போது திருநங்கைகளுக்கான பிரதிநிதித்துவம் குறையும். அரசு வழங்கும் இலவச வீடு மற்றும் பல திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காத சூழல் ஏற்படும். திருநங்கைகள் வாழ்க்கை 25 வருடங்களுக்கு பின்நோக்கி செல்லும் நிலை ஏற்படும். இதனால், கேரளா, மத்தியப்பிரதேசம், அசாம் மாநிலங்களைப் போன்று திருநங்கைகளுக்கு தனிக்கொள்கை வகுக்க வேண்டும்.

ஜூலை 21ஆம் தேதி நடத்தப்பட்ட வரைவு கொள்கை தொடர்பான ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் திருநங்கை உறுப்பினர்களை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். 45 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவை 4 அல்லது 6 மாதங்களாக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்காத பட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க : மத்திய பாதுகாப்புப்படை மீது நம்பிக்கை இல்லை: மெய்தேய் பெண்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.