ETV Bharat / state

Video...போதையில் உணவக உரிமையாளரைத் தாக்கிய வழக்கறிஞர்கள் கைது

author img

By

Published : Aug 22, 2022, 7:00 PM IST

Etv Bharat உணவக உரிமையாளரை தாக்கிய வழக்கறிஞர்கள் கைது
Etv Bharat உணவக உரிமையாளரை தாக்கிய வழக்கறிஞர்கள் கைது

சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் உணவகத்திற்குள் போதையில் புகுந்த வழக்கறிஞர்கள், கடை உரிமையாளர், பணியாளர்கள் ஆகியோரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் குகன் என்பவர் 'மெட்ராஸ் தாபா' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் பிகார் மாநிலத்தைச்சேர்ந்த ரியாஸ் மற்றும் கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகியோர் வேலை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு (ஆக. 22) உணவகத்திற்கு முன்பு தீபக் என்பவர் மதுபோதையில் வாந்தி எடுத்துள்ளார். இதனை கடையில் பணிபுரியும் நபர்கள் 'ஓரமாக போய் வாந்தி எடுங்கள்' எனக்கூறியுள்ளனர். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தீபக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது நண்பர்களை வரவழைத்து கடையில் புகுந்து, அங்கு பணி புரியும் நபர்கள் மற்றும் உரிமையாளரை கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். இதில் உணவகத்தின் உரிமையாளர் குகனுக்கு தலையில் 18 தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் கடையில் பணிபுரியும் ரகுமான் மற்றும் ரியாஸுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

மூவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த ராயபுரம் காவல் துறையினர், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரனை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ராயபுரம் பகுதியைச்சேர்ந்த விஜய் (25), பவர்குப்பம் பகுதியைச்சேர்ந்த திவாகர் (24) எனத்தெரியவந்தது.

உணவக உரிமையாளரை தாக்கிய வழக்கறிஞர்கள் கைது

மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய காமேஸ்வரன், லோகேஸ்வரன், தீபக் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எனத் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்... குளத்தில் கவிழ்ந்து விபத்து... 20 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.