ETV Bharat / state

உடல் உறுப்புக்களை விற்று தருவதாக மோசடி.. நைஜீரியா, உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 10:57 AM IST

Updated : Sep 13, 2023, 11:31 AM IST

money laundering by claiming to sell body parts
உடல் உறுப்புக்களை விற்று தருவதாக மோசடி செய்த நைஜரியா மற்ற்றும் உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது

Human Organ Trafficking racket in Chennai: பிரபல தனியார் மருத்துவமனையின் பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி உடல் உறுப்புக்களை விற்றுத் தருவதாக மோசடி செய்த நைஜீரியா மற்ற்றும் உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் அடங்கிய கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை: பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் இணைதளத்தை போன்று போலியான இணையதளத்தை உருவாக்கி அதில் உடல் உறுப்புகள் விற்று தருவதாக போலி விளம்பரங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை தரப்பில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை தெற்கு மாண்டல போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் சென்னை தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட போலீசார் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் பெங்களுருவில் இருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை தெற்கு மண்டலம் சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பெங்களூரூ சென்று பனஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்து மோசடி கும்பலை தீவிரமாக தேடினர்.

அப்போது மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜெர்மியா (50), உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒலிவியா (25) ஆகியோரை கைது செய்தனர். இதில் உடல் உறுப்புகள் விற்பனை குறித்து பேசிய பணத்தை பெறுவதற்கு வங்கி கணக்குகளை தந்து உதவியாக செயல்பட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராம் பகதூர் ரியாங் (31), மனிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மோனிகா (59) மற்றும் இரோம் ஜேம்சன் சிங் (21) ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நைஜீரிய மற்றும் உகாண்டா நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்த ஜெர்மியா மற்றும் ஒலிவியா ஆகிய இருவரும் நுரையீரல், சிறுநீரகம் போன்ற மாற்று உறுப்புகள் தானத்திற்கு ரூ.5 கோடி தருவதாகவும், கருப்பு தாளை டாலராக மாற்றி தரும் ராசாயண விற்பனை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு திருமண வரன் பார்ப்பதாகவும், ஆபாச வீடியோ அழைப்பு போன்ற இணையவழியில் பல மோசடிகள் செய்து பொதுமக்களை ஏமாற்றி பணம் பரித்தது தெரியவந்தது. இதற்காக இந்திய மக்களின் வங்கி கணக்குகளையும் சிம்காட்டுகளையும் உபயோகித்து வந்ததும் தெரியவந்தது.

இதுமட்டும் அல்லாது, பொதுமக்களிடம் எப்படி பேசுவது என்ற நோட்ஸ் தயார் செய்து வைத்து கொண்டு பொதுமக்கள் கேட்கும் கேள்வி தொடர்பாக பதிலளிக்கும் விதத்தில் உரை தயார் செய்து வைத்து இருந்ததும், ஒவ்வொரு குற்றத்திற்கும் அதுகுறித்த விரிவான விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நன்கு தெரிந்துக்கொண்டு இக்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் இருந்து போன்கள், வங்கி கணக்கு அட்டைகள், மடிக்கணினி முதலியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது போல் எத்தனை நபர்களிடம் மோசடி செய்து உள்ளார்கள்? இதன் பிண்ணனியில் உள்ளாவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீலகிரியில் புலிகள் உயிரிழந்த விவகாரம்.. திடுக்கிடும் வாக்குமூலம்.. ஒருவர் கைது! என்ன நடந்தது?

Last Updated :Sep 13, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.