ETV Bharat / state

ஆளுநர் என்ன எதிர்க்கட்சித்தலைவரா? - கமல்ஹாசன் கேள்வி

author img

By

Published : Oct 26, 2022, 4:12 PM IST

ஆளுநரா? எதிர்க் கட்சித் தலைவரா?... கமல்ஹாசன் கேள்வி......
ஆளுநரா? எதிர்க் கட்சித் தலைவரா?... கமல்ஹாசன் கேள்வி......

'ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத்தாண்டி எதிர்க்கட்சித்தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது, அவர்கள் ஆளுநரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவரா?' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ஆளுநர்களின் அதிகார வரையறை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது கட்சியின் அதிகாரப்பக்கத்தில் செய்துள்ள ட்வீட்டில், 'பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழ்நாட்டிலும் இதே போக்குதான் நிலவுகிறது.

  • பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது. pic.twitter.com/ys7l61xDQu

    — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுபோன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது; "அரசியல்சாசனம் வழங்காத" பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.