ETV Bharat / state

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 2:19 PM IST

Gold rate today in Chennai
தங்கம் விலை இன்று

Gold rate today in Chennai: ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து, ரூபாய் 44,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னை: கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் நிலையில் இன்று (செப்-15) சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூபாய் 44,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச கமாடிட்டி மார்க்கெட் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது, ஏற்றத்துடன் இருந்த நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தன.

இரு நாட்களுக்கு முன் தங்கம் விலை: அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்தது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 5480-க்கும், இதேப்போல், தங்கம் சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து ரூபாய் 43,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூபாய் 77க்கும், ஒரு கிலோவிற்கு ரூபாய் 1000 குறைந்து ரூபாய் 77,000 விற்பனை செய்யப்பட்டன.

நேற்று தங்கம் விலை: நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி புதன்கிழமை விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

இன்று தங்கம் விலை: இதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து, ரூபாய் 5,500க்கும், சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 44,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 500 உயர்ந்து, ரூபாய் 77,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தங்கம் இன்றைய விலை நிலவரம்: (செப்-15)

  • 1கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,500
  • 1சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,000
  • 1கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,970
  • 8கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.47,760
  • 1கிராம் வெள்ளி - ரூ.77.50
  • 1கிலோ வெள்ளி - ரூ.77,500

இதையும் படிங்க: மெர்லின் பாட்டி: 81 வயதில் ஆங்கில டீச்சராக பாடம் எடுக்கும் பாட்டியின் நெகிழ்வான கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.