ETV Bharat / state

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 4:23 PM IST

சென்னையில் தங்கம் விலை
சென்னையில் தங்கம் விலை

Gold price today: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போரில் எதிரொலியாக கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலையானது இன்று சரவன் 200 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது.

சென்னை: சென்னையில் இன்று (அக்.19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 44 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செயப்பட்டு வருகின்றது. தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது.

அது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தான் தினமும் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி, தங்கம் விலையானது சவரனுக்கு 42 ஆயிரத்து 280 ரூபாயாக இருந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி மதியம் அன்று, அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கிய தினத்தன்று, தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

பின்னர் கடந்த 2 வாரமாக காலமாக தங்கத்தின் விலையில், ஏற்றம் இறக்கம் என்பது தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் (அக்.17) சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில், நேற்று (அக்.18) மீண்டும் தங்கத்தின் விலை 360 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், மீண்டும் இரண்டாவது நாளாக இன்று (அக்.19) தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் தங்கம் என்பது ஏழைக்களுக்கு எட்டா கனியாக மாறியுள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்று (அக்.19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 585 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 44 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறன.

இதேப்போல் வெள்ளி, கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, 77.50 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளிக் கட்டி 77 ஆயிரத்து 500 ரூபாக்கும் சில்லறை வர்த்தகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய நிலவரம்: (அக்டோபர் 19)

1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,585

1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,680

1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,055

8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.48,440

1 கிராம் வெள்ளி - ரூ.77.50
1 கிலோ வெள்ளி - ரூ.77,500

இதையும் படிங்க: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - ரூ.2.70 லட்சம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.