ETV Bharat / state

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - ரூ.2.70 லட்சம் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 2:17 PM IST

DVAC raid: தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் காரை இடைமறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.2.70 லட்சம் பறிமுதல்
தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தென்காசி: தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புளியரை மோட்டார் வாகன சோதனைச் சாவடிகளில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், இன்று (அக்.19) அதிகாலை முதல் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் மாற்று உடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் தனது பணியை முடித்துவிட்டு, தனது கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, தவணை விலக்கு அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரேமா ஞானகுமாரியை தடுத்து நிறுத்தி, அவர் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மண் சரிந்து குழியில் சிக்கிய 4 புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு - தனிப்படை போலீசாருக்கு பாராட்டு!

இந்த சோதனையில், அவர் கட்டு கட்டாக பணம் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த பணம் யாருடையது? அலுவலக பணமா அல்லது லஞ்ச பணமா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், பிரேமா ஞானகுமாரி பல்வேறு கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரிடம் இருந்த ரூ.2.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழக-கேரள எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: லியோ ரிலீஸின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள்.. திருமணம் முதல் அபராதம் வரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.