ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : May 31, 2020, 6:59 PM IST

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

'தமிழ்நாட்டிற்குள் கால் வைத்தாலே கரோனா டெஸ்ட் கட்டாயம்' - மக்கள் நல்வாழ்வுத் துறை!

சென்னை: சென்னை பெருநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் உருப்படியான ஆலோசனைகளை வழங்கவில்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: கரோனா காலத்திலும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள், இதுவரை உருப்படியான ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்.

இந்தியாவின் பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் - ராஜ்நாத் சிங்

டெல்லி : இந்தியாவின் பெருமைக்கு களங்கம் விளைவிப்பதை அரசு அனுமதிக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வெட்டுக்கிளிகள் தாக்கம்: ஜூலை மாதம் பாதி வரை இந்தியாவுக்குள் தொடரும் : டாக்டர் கே.எல். குர்ஜார்

வெட்டுக்கிளிகளில் செயல்பாடுகள் குறித்து நமது ஈடிவி பாரத் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதியிடம், மத்திய அரசின் வெட்டுக்கிளி எச்சரிக்கை அலுவலகத்தின் உயர் அலுவலர் விவரித்தார்.

வெறித்த நிலத்தில் இயற்கை முறையில் திராட்சைப் பயிர்; கலக்கும் விவசாயி சுருளிராஜன்

பெரம்பலூர் அருகே மாவட்டத்திலேயே முதல்முறையாக இயற்கையான முறையில் திராட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...

மனிதனின் மிருகத்தன்மை: பார்வையை இழந்த நாய்

சென்னை: அரும்பாக்கத்தில் சுற்றித்திரிந்த நாயொன்றை 50 வயது நபர் ஒருவர் கொடூரமாக கல்லால் தாக்கி அதன் கண்ணை சேதப்படுத்தி இரக்கமற்ற செயலில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்து கிடந்த முயல்... அதனை நாய்களுக்கு உணவளித்து டிக்டாக்கில் பதிவேற்றிய மூவர் கைது!

கோவை: சாலையில் அடிபட்டு இறந்த காட்டு முயலை மூன்று இளைஞர்கள், தங்களது வளர்ப்பு நாய்களுக்கு உணவாகக் கொடுக்கும் காணொலியை டிக்டாக்கில் பதிவேற்றி வனத்துறையிடம் சிக்கியுள்ளனர்.

உத்தரகாண்ட் அமைச்சரின் மனைவிக்கு கரோனா உறுதி!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜின் மனைவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சைரஸ் மிஸ்திரியின் பங்கு விவகாரம்: டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கு சேர வேண்டிய பங்குகளை வழங்க வேண்டும் என அந்நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: இன்னும் எத்தனை பேரைதான் கொலை செய்வீர்கள்?

அட்லான்டா: ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.