ETV Bharat / state

மேயர் குழந்தைக்கு "திராவிட அரசன்" எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர்

author img

By

Published : Dec 27, 2022, 3:19 PM IST

குழந்தைக்கு "திராவிட அரசன்" என பெயர் சூட்டிய ஸ்டாலின்
குழந்தைக்கு "திராவிட அரசன்" என பெயர் சூட்டிய ஸ்டாலின்

தாம்பரம் மாநகராட்சி மேயரின் குழந்தைக்கு ''திராவிட அரசன்'' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

சென்னை: கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற இந்திய வரலாற்று காங்கிரஸ் 81-வது மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய முதலமைச்சர் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அவர்களின் 3 மாத கைக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்ததோடு, குழந்தைக்கு ''திராவிட அரசன்'' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அப்போது உடன் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இந்தித் திணிப்பு கல்வித் துறையின் மறுமலர்ச்சி? மத்திய அமைச்சரை விளாசிய மதுரை எம்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.