ETV Bharat / state

சொற்ப வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த வேட்பாளர்கள் பட்டியல்!

author img

By

Published : May 4, 2021, 2:47 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 1,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tamil Nadu Election
வேட்பாளர்கள் பட்டியல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. 10 ஆண்டுகாலத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் அமர்வதால், கட்சி தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்பின்படியே திமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.

ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவைவிட 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்கு அதிகம் பெற்று தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை எ.வ.வேலு (திமுக) 94,673 வாக்குகள் வித்தியாசம், பூவிருந்தவல்லியில் கிருஷ்ணசாமி (திமுக) 94,110, எடப்பாடியில் பழனிசாமி(அதிமுக) 93,802, திருச்சி மேற்கில் கே.என்.நேரு (திமுக) 85,109, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் (திமுக) 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதே சமயம், 1,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள் இதோ...

1. தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணனை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்,

2. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

3. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தான் பாண்டியனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

4. மேட்டூர் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சதாசிவம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாச பெருமாளை 656 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

5. காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரைமுருகன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் வி ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

6. கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனை 794 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

7. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

8. நெய்வேலி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

9.ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.சி. வீரமணியை 1091 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

10.கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தாமோதரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் குறிஞ்சி பிரபாகரனை 1095 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 31 பேரும், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 33 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 57 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 80 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.