ETV Bharat / state

"10% இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக மாயத்தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது"

author img

By

Published : Nov 15, 2022, 5:49 PM IST

10 சதவீத இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக மாயத் தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது
10 சதவீத இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக மாயத் தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது

10 சதவீத இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்

சென்னை பெரியார் திடலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, "உயர் சாதியர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு செய்ய வேண்டும். 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதாரத்தை வைத்து இட ஒதுக்கீடு வழங்குவது என்பது மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ள கொள்கையாகும். இதை பாஜக அமல்படுத்த நினைக்கிறது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது.

நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கொடுத்தாலும் மக்கள் வழியாகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, முதலில் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்து தென் மாநிலங்களிலும் அதற்கு அடுத்தபடியாக அகில இந்தியா முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்.

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும். அகில இந்தியா முழுவதும் ஒத்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் இணைத்து ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக மாற்றுவோம்.

"10% இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக மாயத்தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது"

1950ஆம் ஆண்டு வகுப்பு வாத பிரச்னையின் போது ஏற்பட்ட கிளர்ச்சியைப்போல் தற்போதும் ஏற்படும். அதிமுகவில் ஒரு சில பேர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், அது எந்த அதிமுக என்று கேள்வி எழும்புகிறது. தற்போது, அதிமுகவினர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை" எனக் கூறினார்.

மேலும் திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'நான் விரைவில் மாஸ் எண்ட்ரி கொடுப்பேன்' - பிரியாவின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.