ETV Bharat / state

இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

author img

By

Published : Jun 29, 2022, 2:27 PM IST

Updated : Jun 29, 2022, 3:12 PM IST

இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட போட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...
இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட போட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவில் அதிமுகவினர் சுயேட்சை சின்னம் கோரியுள்ளனர். வேட்பு மனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்பினர் கையெழுத்திட முன் வந்ததாகவும், ஈபிஎஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிக்கல்: இதனிடையே, அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஜூன் 14 ஆம் தேதி ஆரம்பித்த ஒற்றை தலைமை விவகாரம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அடுத்த மாதம் ஜூலை 9 தேதி நடைபெறக்கூடிய உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட போட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...
இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

510 பதவிகளுக்குத் தேர்தல்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 27 கடைசிநாள் ஆகும். பெரும்பாலான அதிமுகவினர் சுயேச்சை சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம் வேண்டுமென்றால் படிவம் 1 படிவம் 2-ல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும்.

இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட போட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...
இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

சுயேட்சை சின்னத்தில் போட்டி: ஆனால் ஒற்றை தலைமை விவகாரத்தால் கையெழுத்து இடாததால் அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்பினர் கையெழுத்திட முன் வந்ததாகவும் அதற்கு ஈபிஎஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கையெழுத்திட மறுத்த ஈபிஎஸ்: இந்த படிவத்தில் கையெழுத்திட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும் என ஈபிஎஸ் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம் போல் அதிமுக நிர்வாகிகளை பல கோடி கொடுத்து வாங்கிய எடப்பாடி - டிடிவி தினகரன்

Last Updated :Jun 29, 2022, 3:12 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.