ETV Bharat / state

ஏ+ கேட்டகிரி ரவுடி மதுரை பாலா அதிரடி கைது!

author img

By

Published : Aug 9, 2023, 1:36 PM IST

Updated : Aug 9, 2023, 3:58 PM IST

தலைமறைவாக இருந்த ஏ+ கேட்டகிரி ரவுடியான மதுரை பாலாவை அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மதுரை பாலா
கைது செய்யப்பட்ட மதுரை பாலா

சென்னை: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலா (எ) மதுரை பாலா. ஏ+ கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை, ஆள் கடத்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப் படையை ஏவி கொலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவக்குமார் உட்பட பல பேருக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் சரண் அடைவதை பாலா வாடிக்கையாக செய்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாலா மற்றும் அவரது கூட்டாளியான சிவா, மதன் ஆகிய 3 பேரை ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அப்போது தமிழக காவல் துறை தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், தங்களது கை, கால் உடைக்கப்பட்டலோ அல்லது உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு முக்கிய காரணம் தமிழக காவல் துறை என மதுரை பாலா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: தாம்பரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 27 சவரன் தங்க நகைகள் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை

இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் மதுரை பாலாவை ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, நீதிமன்றத்திலே ஒரு கும்பல் மதுரை பாலாவை கொலை செய்ய வந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி மதுரை பாலா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'நான் ஜெயிலுக்கு போமாட்டேன்' - கோவை கோர்ட்டில் கத்தியை காட்டிய மிரட்டிய நபர்!

மேலும், கேரளாவில் இருந்தபடியே தொழிலதிபர்களை மிரட்டி பணப்பறிக்கும் செயலில் மதுரை பாலா ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8) கேரளா மாநிலம் முரிங்கூர் என்ற இடம் அருகே வைத்து அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மதுரை பாலாவை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மதுரை பாலாவை சென்னை அழைத்து வந்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சொகுசு காரில் சென்று திருட்டு.. ஆடு, மாடுகள் தான் டார்கெட்.. பலே திருடர்கள் சிக்கியது எப்படி?

Last Updated :Aug 9, 2023, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.