ETV Bharat / bharat

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நாடாளுமன்றத் தேர்தல்.. தலைநகர் உட்பட 58 தொகுதிகள் போட்டி! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 8:59 AM IST

Lok Sabha Election 2024 Phase 6 Live Updates: இந்தியாவில் தலைநகரில் உள்ள ஏழு மாநிலங்கள் உட்பட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, 6ம் கட்டமாக இன்று (மே 25) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் மை
தேர்தல் மை (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடு முழுவதும் துவங்கிய நாடாளுமன்றத் தேர்தல் என்னும் தேர்தல் திருவிழா, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக சுமார் 88 தொகுகளில் துவங்கிய தேர்தல் கடைசியாக மே 20ஆம் தேதி வரை 5 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று (மே 25) 6ம் கட்டமாக 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்கள் உட்பட 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, பீகார், ஜார்கண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் - ராஜோரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 58 தொகுகளில், 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 5.48 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 5,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடன் தயார் நிலையில் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6ம் கட்டத் தேர்தல் நடபெறும் தொகுதிகள்:-

  • பீகார்: வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரம், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன் மற்றும் மகாராஜ்கஞ்ச்
  • ஹரியானா: அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான் மற்றும் ஃபரிதாபாத்
  • ஜார்க்கண்ட்: கிரித், தன்பாத், ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூர்
  • ஒடிசா: சம்பல்பூர், கியோஞ்சார், தேன்கனல், கட்டாக், பூரி மற்றும் புவனேஸ்வர்
  • உத்தரபிரதேசம்: சுல்தான்பூர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோம்ரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அசம்கர், ஜான்பூர், மச்சிலிஷாஹர், பதோஹி மற்றும் பிரதாப்கர்
  • மேற்கு வங்கம்: தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பங்குரா மற்றும் பிஷ்ணுபூர்
  • டெல்லி: சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி
  • ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்த்நாக் - ராஜோரி என்ற ஒரே தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே இங்கு 3ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மோசமான வானிலை காரணமாக 6வது கட்டத்துக்கு மாற்றப்பட்டது. சுமார் 20 வேட்பாளர்கள் போட்டியிடும் இத்தொகுதியில் 18.36 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

6ம் கட்டத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

  • ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி போட்டி.
  • டெல்லி - பாஜக சார்பில் பன்சூரி ஸ்வராஜ் போட்டி; மறைந்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் மகளான பன்சூரி ஸ்வராஜ் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதியுடன் போட்டியிடுகிறார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸின் கன்னையா குமார் போட்டி.
  • உத்தரபிரதேசம் - சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டி; மேலும் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் புவால் நிஷாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உதய் ராஜ் வர்மா போட்டி.
  • ஹரியானா - பாஜக சார்பில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் போட்டி.
  • குருஷேத்ராவில் பாஜக சார்பில் நவீன் ஜிண்டால், ஒடிஷாவின் பூரியில் பாஜகவின் சம்பித் பத்ரா, சம்பல்பூரில் தர்மேந்திர பிரதான் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

தற்போது இந்த 6ம் கட்டத் தேர்தல் நிறைவடைந்தால் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதியில் 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிடும். அதாவது கிட்டத்தட்ட 90% தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்துவிடும்.

இதையும் படிங்க: இன்று 2024 மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு.. எந்தெந்த தொகுதிகள்? முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.