ETV Bharat / state

பி.இ, பி.டெக் படிப்பு - 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு

author img

By

Published : Aug 16, 2021, 7:42 PM IST

பி.இ, பி.டெக் படிப்பு
பி.இ, பி.டெக் படிப்பு

பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு இன்று (ஆக.16) மாலை 5.30 மணி வரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பொறியியல் படிக்க இந்தாண்டு செம ஆர்வம் காட்டும் மாணவர்கள்

அதன்படி பொறியியல் படிப்பில் சேர இன்று வரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 19 ஆயிரத்து 57 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

1 லட்சத்து 2ஆயிரத்து 127 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.