ETV Bharat / state

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

author img

By

Published : Jun 28, 2019, 1:34 PM IST

திமுகவி

சென்னை: அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து அக்கட்சியில் இணைந்துள்ளார்.

அமமுக முக்கிய நிர்வாகியாக வலம் வந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அக்கட்சியின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து, அவர் திமுகவில் இணைவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து இணைந்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ’தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே நல்ல தலைவராக திகழ்ந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவார். எல்லோரையும் அனுசரித்து போகக்கூடிய நிலைக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வந்துவிட்டார். எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என அதிமுகவிலிருந்து வந்தவர்களை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார்.

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்
திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்

கட்சி என்றால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுக முட்டிமோதிக்கொண்டிருக்கிறது. பாஜாகவால் இயக்கப்படும் அதிமுகவிற்கு தன்மானத்தை விடுத்து செல்ல விரும்பவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செலவன்

தலைவர் கலைஞர் இறந்தபின், இரே இரவில் கடற்கரையில் நினைவிடம் அமைக்க நீதிமன்றம் மூலம் இடம் வாங்கிய தைரியம், ஆர்.கே.நகர் தோல்விக்கு பிறகும், தமிழ்நாடு மக்களுக்காக போராடுவது திமுக தான் என்ற பெயரெடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்துள்ளேன். தேனியில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் வைத்து மற்ற உறுப்பினர்களை திமுகவுக்கு அழைத்து வரவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Intro:Body:

தி.மு.க. வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.



அ.ம.மு.க. விலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க. வில் இணைந்துள்ளார். இதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் அவர் இன்று சந்தித்தார்.  



பிறகு பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் தளபதி மட்டும் தான் நாட்டுக்கு நல்ல தலைவராக திகழ்ந்து பல திட்டங்களை செயல்படுத்துவார் என்று தற்போது தி.மு.க. வில் இணந்துள்ளேன்.



எல்லோரையும் அனுசரித்து போகக்கூடிய நிலைக்கு தளபதி ஸ்டாலின் வந்துவிட்டார். ஏ.வ.வேலு, செந்தில்பாலாஜி என்று அ.தி.மு.க. விலிருந்து வந்த அனைவரையும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார்.



கட்சி என்றால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டதன் மூலமாக தான் தி.மு.க சிறப்பாக இயங்கி வருகிறது. அம்மா வின் இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள். அ.தி.மு.க. வை பா.ஜ.க. தான் இயக்கி வருகிறது. எனவே தன்மானத்தை விடுத்து அங்கு போக நான் விரும்பவில்லை.



கலைஞர் இறந்த பின்பு ஒரே இரவில் கடற்கரையில் அவர் சமாதிக்கு நீதிமன்றம் மூலம் இடம் வாங்கிய தைரியம், ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்த பிறகும் தமிழக மக்களுக்கு போராடுவது தி.மு.க தான் என்ற முறையில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஈர்க்கப்பட்டு தி.மு.க. வில் இணைந்துள்ளேன்.



எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கட்சி தலைமை இரண்டானது அம்மா மறைவுக்கு பின் கட்சி தலைமை நான்கானது. அதோடு தலைமை பதவி முடிந்துவிட்டது. அ.தி.மு.க வினரும் தி.மு.க வினரும் ஒரே வண்டியில் போகக்கூடிய காலம் தற்போது உருவாகியுள்ளது.



அண்ணன் தளபதி நேர்மையுள்ள ஆட்சியாளராக நலத் திட்டங்களை சிறப்பாக வழங்கக்கூடிய தலைமை ஸ்டாலினுக்கு மட்டும்தான் இருக்கிறது.



தேனியில் தளபதி ஸ்டாலின் தலைமையில் கூட்டம் வைத்து மற்ற உறுப்பினர்கள தி.மு.க. வுக்கு அழைத்து வரவுள்ளேன்" என்று கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.