ETV Bharat / state

தம் அடிக்கிறத நிறுத்த 3 சிம்பிள் அட்வைஸ்!

author img

By

Published : Feb 9, 2019, 12:18 PM IST

cigarette

புகைப்பிடிப்பதில் இருந்து உங்களை நீங்களே மீட்க வேண்டுமென்றால், இந்த மூன்று முத்தான யோசனைகளை பின்பற்றி பாருங்கள். அப்போது புரியும்!

ஒரு மனிதனுக்கு நோய் உருவாவதற்கு இரண்டே காரணங்கள்தான், ஒன்று தவறான உணவு வகைகளை சாப்பிடுவது, மற்றொன்று தவறான பழக்கத்தை பின்பற்றுவதுதான்.

மனிதனுக்கு நோய் மட்டுமில்லாமல் மரணம் வரைக்கும் கொண்டும் செல்லும் சில பழக்கங்கள், அதில் ஒன்றுதான் புகைப்பிடித்தல். இது புகைப்பிடிப்பவரை மட்டுமின்றி, அவரை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்.

இந்தியாவில் மட்டும் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்படியான மிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புகைப்பிடிக்கும் பழக்கத்தை எப்படிப்பா நிறுத்துவது... அப்படினு புலம்பிருப்பாங்க பலர்- அவர்களுக்காகத்தான் இந்த மூன்று வழிமுறைகள்:

  • புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், 'சிகரெட் பிடிக்கக்கூடாது அப்படி தீர்வு எடுத்துருக்கேன்டா...' அப்படினு நமக்கு நாமே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இரண்டாவதாக நீங்கள் யாருக்கும் எதற்கும் அடிமையில்லை என்ற உணர்வை மேலோங்க செய்ய வேண்டும். 'ஒன்னுமில்லாத தம்மாத் துண்டு தம் (சிகரெட்) நம்மை ஆட்டி படைக்கணுமா? அதை அடக்கியே ஆக வேண்டும்' என்று எண்ணம் நமக்குள் ஊற்றெடுக்க வேண்டும்.
  • கடைசியாக 'நாம், அடிமை பழக்கத்தை பட்னி போட்டு சாவடிக்க வேண்டும்' என்று மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும்.

ஒரு மாதம் சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டால், மீண்டும் அந்த பழக்கத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதிலும் புகைப்பிடிப்பதை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவிட்டால் மீண்டும் அந்த பழக்கத்திற்கு திரும்ப நம் மனம் அதற்கு இடம் அளிக்காது. அதனால் இன்றே நிறுத்துங்கள் சிகரெட்டை!

Intro:Body:

MAHA


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.