ETV Bharat / sports

IPL 2022 FINAL: இறுதி யுத்தத்தில் ஜொலிக்கப்போவது யாரு?

author img

By

Published : May 29, 2022, 3:35 PM IST

IPL 2022 FINAL
IPL 2022 FINAL

இன்றைய இறுதிப்போட்டியில், எந்தெந்த வீரர்கள் ஜொலித்து தங்களின் அணியை ஜெயிக்கவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. அதில், இரண்டு அணிகளிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களை இங்கு காண்போம்.

இந்தியர்களின் கோடைக்கால கொண்டாட்டங்களில் முக்கியமானவற்றுள்ள ஒன்று ஐபிஎல் தொடர். இந்தாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி இன்றைய இறுதிப்போட்டியுடன் நிறைவுபெற இருக்கின்றன. குஜராத், லக்னோ எனப் புதிதாக இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் 2022 தொடர் அமர்களமாக ஆரம்பித்தது.

மெகா ஏலத்தில் இருந்தே எதிர்பார்ப்பை எகிறவைத்து இந்தத் தொடரில் ஏபி டிவில்லியர்ஸ், கெயில், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஸ்டார்க் போன்ற நட்சத்திர டி20 வீரர்கள் விளையாடவில்லை. இப்படி தொடங்கிய ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத குஜராத் அணியும், ஆரம்பத்தில் இருந்தே அனைவரின் கவனத்தையும் பெற்ற ராஜஸ்தான் அணியும் தற்போது இறுதிப்போட்டி வரை வந்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட வீரர்கள் என்றில்லாமல், ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பினால் இவ்விரு அணிகளும் இந்த இடத்திற்கு வந்துள்ளன. அப்படியிருக்க, இன்றைய இறுதிப்போட்டியில், எந்தெந்த வீரர்கள் ஜொலித்து தங்களின் அணியை ஜெயிக்கவைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. அதில், இரண்டு அணிகளிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களை இங்கு காண்போம்.

கேப்டன்கள் இன்னிங்ஸ்: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி, ஒரு தனி அணியை கட்டியெழுப்பி தற்போது பைனல்ஸ் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு நீண்ட இடைவேளக்கு பின்னர் பந்துவீசிய பாண்டியா, இந்த தொடர் முழுவதும் பேட்டிங் ஆர்டரிலும் முன்னேற்றம் கண்டு மூன்றாவது இடத்தில் ஆடிவந்தார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. இதுவரை 4 அரைசதங்களுடன் 453 ரன்களை எடுத்து, 132.84 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

அதேபோன்று, ராஜஸ்தான் அணியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கும் கேப்டன் சாம்சனும் 16 போட்டிகளில் 444 ரன்களில் எடுத்து அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்துவருகிறார். எனவே, இன்றைய போட்டியில் இருவரும் கேப்டன்சியில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சோபித்தால்தான் கோப்பையை தழுவ முடியும்.

குஜராத் ஃபினிஷர்கள்: எல்லா அணிகளிலும் ஃபினிஷர் என்று ஒருவர்தான் இருப்பார். ஆனால், குஜராத்தில் மட்டும் மில்லர், திவாட்டியா, ரஷித் கான் என வரிசைக்கட்டி நிற்கிறார்கள். இதுவரை அந்த அணி சேஸிங் செய்து மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியிருக்கிறது. இதனால், இன்றைய போட்டியில் குஜராத் சேஸிங் செய்யுமானால் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறிதான்.

ஆட்டத்தை மாற்றும் ஸ்பின்னர்கள்: இவ்விரு அணிகளும் சிறப்பான சுழற்பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய அணியாக விளங்குகிறது. குஜராத்தில் ரஷித் கான், சாய் கிஷோர் அதிரடி ஜோடி என்றால் ராஜஸ்தானிடம் அஸ்வின் - சஹால் என்ற மிரட்டும் ஜோடி இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் சுழற்பந்துக்கு ஒத்துழைக்கும் என்ற பட்சத்தில் இவர்களில் விரல்களும், மணிக்கட்டுகளும் இன்று மாயாஜாலம் நடத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

இரண்டு அணிகளிலும் சிறு சிறு பலவீனங்கள் இருந்தாலும், எந்த அணியின் இந்த நீண்ட தொடரின் இறுதி அத்தியாத்தில் எந்த வீரர்கள் தங்களின் பெயரை பதிக்க காத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க: Women's T20 Challenge: 3ஆவது முறையாக பட்டத்தை வென்றது சூப்பர்நோவாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.