ETV Bharat / sports

இறுதிப்போட்டியில் இடம்பிடிக்கப் போவது யார்? ஹைதராபாத் - டெல்லி மோதல்!

author img

By

Published : Nov 8, 2020, 3:18 PM IST

ipl-2020-struggling-dc-take-on-resurgent-srh
ipl-2020-struggling-dc-take-on-resurgent-srh

அபுதாபி: ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன.

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள போகும் அணி யார் என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டி இன்று நடக்கவுள்ளது. டெல்லி அணியை ஹைதராபாத் எதிர்கொள்ளவுள்ளது.

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்த வலுவான அணியாக இல்லை என்பது இரண்டாம் பாதியிலேயே தெரிந்துவிட்டது. டெல்லி அணி ஆடும் போட்டியில் ஒவ்வொறு ஓட்டையாக வெளிவந்துகொண்டே இருக்கிறது.

டெல்லி அணி
டெல்லி அணி

ஆனால் மறுபக்கம் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியோ, ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மேட்ச் வின்னர்களை உருவாக்கி வருகிறது. ஒரு போட்டியில் வார்னர் ஆடினால், இன்னொரு போட்டியில் சஹா ஆடுகிறார். இவர்கள் ஆடவில்லை என்றால் வில்லியம்சன் ஆடுகிறார். இதேபோல் தான் பந்துவீச்சிலும். சந்தீப் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால் ஹோல்டரும், நடராஜனும் விக்கெட்டை தூக்குகின்றனர். இதனால் ஹைதராபாத் அணி ஒவ்வொரு போட்டிக்கும் வெற்றியின் தாகத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த போட்டியில் தோல்வியடைந்த பின் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், சரியான திட்டமிடலை நிச்சயம் செயலில் வெளிப்படுத்துவோம் என்றார். இதனால் இன்றைய போட்டியில் வார்னர், மனீஷ் பாண்டே, வில்லியம்சன், சஹா ஆகியோருக்கு சரியான திட்டத்துடன் களமிறங்கி செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஹைதராபாத் அணி
ஹைதராபாத் அணி

டெல்லி அணியின் முக்கிய பலமாக பார்க்கப்பட்ட ரபாடா, நார்கியே ஆகியோர் பின்பாதி ஐபிஎல் தொடரில் சரியான ஃபார்மில் இல்லாததே டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பேட்ஸ்மேன்களின் ஃபார்மின்மை. தவான், ஸ்ரேயாஸ் ஆகியோர் ஃபார்மில் இருந்தாலும், கன்சிஸ்டன்சி என்றால் அனைவரும் பல எல்லைகளைக் கடந்து இருக்கின்றனர். இதனால் டெல்லி அணி தாங்கள் செய்த தவறை உணர்ந்து விளையாடினால் மட்டுமே ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும். இல்லையென்றால் கடந்த ஆண்டை போலவே ப்ளே ஆஃப் சுற்றோடு வெளியேற வேண்டியது தான்.

இதையும் படிங்க: கேப்டன் பதவியிலிருந்து கோலி விலக வேண்டும்: கவுதம் கம்பீர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.