ETV Bharat / sports

கேப்டன் பதவியிலிருந்து கோலி விலக வேண்டும்: கவுதம் கம்பீர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

time-to-remove-kohli-from-rcb-captaincy-feels-gautam-gambhir

author img

By

Published : Nov 7, 2020, 5:31 PM IST

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனால் ஆர்சிபி அணியின் ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்தது.

இந்த ஆண்டு ஐபிஎல் லீக் தொடரை சிறப்பாகத் தொடங்கிய ஆர்சிபி அணியால், சரியாக முடிக்கவில்லை. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறுவதற்குள் ஆர்சிபி அணியில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் நேற்றைய போட்டி முடிந்தவுடன், ஆர்சிபி அணி செய்த தவறுகள் அனைத்தையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

அதில் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சியை பற்றி சில விமர்சனங்கள் வந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

இதைப்பற்றி கம்பீர் கூறுகையில், ''நானாக இருந்தால் நிச்சயம் கோலியை கேப்டன்சி பதவியிலிருந்து நீக்கியிருப்பேன். தலைமையில் இருப்பவர்களை கேள்விக்குள்ளாக்காமல் இருப்பதுதான் பெரும் பிரச்னை. எட்டு ஆண்டுகளாக ஒரு தொடரில் ஒருமுறை கூட கோப்பையைக் கோலியால் வெல்ல முடியவில்லை. எனக்கும் கோலிக்கும் இடையே பிரச்னைகள் எதுவும் இல்லை. இது அவரைப் பற்றிய விமர்சனம்தான்.

வேறு ஏதேனும் கேப்டன்கள் இப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை தான் பதில். எட்டு வருடமாக கேப்டனாக வேண்டாம், அணியின் வீரராகவே கோப்பையை வெல்லாமல் யாராலும் பயணம் செய்ய முடியாது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று, கோலி தனது பதவியிலிருந்து விலக வேண்டும்.

பஞ்சாப் அணிக்காக அஸ்வின் இரண்டு வருடம் கேப்டனாக செயல்பட்டார். அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றபோது, உடனடியாக அடுத்த கேப்டனுக்கு சென்றுவிட்டார்கள். ரோஹித் ஷர்மா, எம்.எஸ். தோனி ஆகியோர் தங்களது அணிகளுக்காக கேப்டனாக பல கோப்பைகளை வென்றுகொடுத்துவிட்டார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றிகரமான கேப்டனாகவும், நீண்ட ஆண்டுகளாகவும் கேப்டனாக தொடர்கிறார்கள்.

ஒருவேளை ரோஹித் ஷர்மா கேப்டனாக கோப்பையை வெல்ல முடியவில்லை என்றால், நிச்சயம் அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். விராட் கோலி எப்படி வெற்றிகளுக்கு பங்கினை எடுத்துக் கொள்கிறாரோ, அதேபோல் தோல்விகளுக்கும் பங்கெடுத்துக் கொண்டு பதவி விலக வேண்டும்.

தொடர்ந்து நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியான அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளோம் என்று கோலி கூறுவதால், ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியான அணியாகிவிடாது. நிச்சயமாக ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்றில் ஆடுவதற்கு தகுதியே இல்லாத அணி ஆர்சிபி.

திடீரென விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குகிறார். விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றால், ஐபிஎல் ஏலத்தின் போதே நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி விராட்கோலி , டி வில்லியர்ஸ் ஆகியோரை நம்பியே உள்ளது.

ஒருவேளை இந்த ஆண்டு டி வில்லியர்ஸால் சிறப்பாக ஆட முடியவில்லை என்றால், ஆர்சிபி அணிக்கு என்ன நடந்திருக்கும் என்றே நினைக்கவே முடியவில்லை. ஆர்சிபி அணி வெற்றிபெற்ற 7 போட்டிகளில் 3 போட்டிகளை டி வில்லியர்ஸ் வென்று கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு எப்படி செயல்பட்டார்களோ, அதேபோல் தான் இந்த ஆண்டும் ஒரு அணியாக செயல்பட்டுள்ளார்கள். ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்கள் என்பதால், ஐபிஎல் தொடரை வெல்ல கூடிய அணி என்று கருத முடியாது. அவர்கள் தனி நபரின் சிறப்பாக ஆட்டத்தில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றார்கள்'' என்றார்.

இதையும் படிங்க: ஆர்சிபி ரசிகர்களுக்கு எமோசனல் குறிப்பை எழுதிய கேப்டன் கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.