ETV Bharat / sports

IND vs SA 3rd T20: மீண்டும் இந்தியா முதல் பேட்டிங் !

author img

By

Published : Jun 14, 2022, 6:57 PM IST

Updated : Jun 14, 2022, 9:23 PM IST

IND vs SA 3rd T20
IND vs SA 3rd T20

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

விசாகப்பட்டினம்: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பயிற்சியின்போது காயம் காரணமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் தொடரிலிருந்து விலகினர். இதனால், கேப்டனாக ரிஷப் பந்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கட்டக்கில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணியை தோற்கடித்தது. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், 3ஆவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஏசிஏ - விடிசிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தியா: இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால்.

தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ரிக்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், வெயின் பார்னால், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், ஆன்ரிச் நோர்க்கியா, ஷம்ஸி.

இதையும் படிங்க: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமங்கள் ரூ. 44,075 கோடிக்கு ஏலம்... எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா..?

Last Updated :Jun 14, 2022, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.