ETV Bharat / sports

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமங்கள் ரூ. 44,075 கோடிக்கு ஏலம்... எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா..?

author img

By

Published : Jun 13, 2022, 4:39 PM IST

ஐபிஎல் தொடர்களுக்கான (2023-27) தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், ரூ. 23,575 கோடிக்கும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ரூ. 20,500 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ipl-media-rights-sold-to-2-broadcasters-for-tv-and-digital-for-rs-44075-crore
ipl-media-rights-sold-to-2-broadcasters-for-tv-and-digital-for-rs-44075-crore

மும்பை: ஐபிஎல் தொடர்களுக்கான (2023-27) தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமங்களுக்கான ஏலம் நேற்று (ஜூன் 12) தொடங்கி இன்று (ஜூன் 13) முடிந்தது. இந்த ஏலம் 4 பிரிவுகளாக நடைபெற்றது. அந்த வகையில், இந்தியாவில் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் (ஆன்லைன், மொபைல்) உரிமம், எக்ஸ்க்ரளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்புவதற்கான உரிமம், இந்தியாவை தவிர இதர பகுதிகளில் ஒளிபரப்புவதற்கான உரிமம் என்று ஏலம் நடத்தப்பட்டன.

இந்த ஏலத்தில் டிஸ்னி-ஹாட் ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், சூப்பர்ஸ் போர்ட், டைம்ஸ் இன்டர்நெட், ரிலையன்ஸ் வியாகாம் 18 உள்பட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இறுதியில் மொத்தம் 410 போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், ரூ. 23,575 கோடிக்கும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ரூ. 20,500 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் ஏலம் எடுத்த நிறுவனங்களின் பெயர்களை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். கடந்த 2017ஆம் ஆண்டில், ஸ்டார் குழுமம் 2018-2022 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ரூ. 16,347.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ​​அந்த வகையில் ஒரு போட்டிக்கு ரூ.54.5 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.100 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IND vs SA: இந்தியா முதல் பேட்டிங் - டி காக் மிஸ்ஸிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.