ETV Bharat / sports

IND Vs NED: அதிரடியாக சதம் அடித்த ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்... இந்திய அணி 410 ரன்கள் குவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 1:47 PM IST

Updated : Nov 12, 2023, 5:59 PM IST

ind-vs-ned-match-
ind-vs-ned-match-

ICC Cricket World Cup 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டமான 45வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 410 ரன்கள் குவித்தது. 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை கொண்டு நெதர்லாந்து அணி களம் இறங்க உள்ளது.

பெங்களூரு: 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடின.

இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், சுப்மன் கில் 51 ரன்களிலும், ரோகித் ஷர்மா 61 ரன்களிலும், விராட் கோலி 50 ரன்களிலும் மற்றும் கே.எல்.ராகுல் 102 ரன்களிலும் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 410 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். அதன்பின் களம் இறங்கிய மிடில் ஆடர் வீரர்கள் அதிரடியாக விளையாடியனர். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 128 ரன்களை குவித்தார். மேலும் கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 2 ரன்களை எடுத்தார்.

நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்திய அணியை வீழ்த்தி, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னேற வேண்டும் என நெதர்லாந்தும், தொடரில் தோல்வியே காணாத அணி என்ற பெருமையைத் தக்க வைக்க வேண்டும் என இந்திய அணியும் முனைப்புடன் செயல்படும் என்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பிளேயிங் 11: ரோகித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

நெதர்லாந்து அணியின் பிளேயிங் 11: வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.

இதையும் படிங்க: தீபாவளி கொண்டாடிய இந்திய வீரர்கள்.. தொடர் வெற்றியால் தீபாவளி பரிசு கொடுக்குமா ரோகித் அணி?

Last Updated :Nov 12, 2023, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.