பெங்களூரு (கர்நாடகா): உலகமெங்கும் இன்று (நவ.12) தீபாவளித் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுகிறது. அந்த வகையில், ஐசிசி உலகக் கோப்பை தொடர் 2023-இல் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியினரும், தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடி உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீபாவளி கொண்டாடி உள்ளனர்.
-
From us to all of you, Happy Diwali 🪔❤️ pic.twitter.com/vXA8CiGt7A
— K L Rahul (@klrahul) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From us to all of you, Happy Diwali 🪔❤️ pic.twitter.com/vXA8CiGt7A
— K L Rahul (@klrahul) November 11, 2023From us to all of you, Happy Diwali 🪔❤️ pic.twitter.com/vXA8CiGt7A
— K L Rahul (@klrahul) November 11, 2023
இந்த கொண்டாட்டத்தில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்பிரே உள்ளிட்டோரும் இடம் பெற்று இருந்தனர். இதனை தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல், “உங்கள் அனைவருக்கும் எங்களது தீபாவளி நல்வாழ்த்துகள்” என பதிவிட்டு, குழுவாக எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.
-
शुभ दीपावली 🪔 pic.twitter.com/yIfGnwNmUv
— Ishan Kishan (@ishankishan51) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">शुभ दीपावली 🪔 pic.twitter.com/yIfGnwNmUv
— Ishan Kishan (@ishankishan51) November 11, 2023शुभ दीपावली 🪔 pic.twitter.com/yIfGnwNmUv
— Ishan Kishan (@ishankishan51) November 11, 2023
அதேபோல், “சுப தீபாவளி” என இஷான் கிஷானும் இந்தியில் ட்வீட் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே, இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரின் 45வது லீக் ஆட்டத்தில்.
நெதர்லாந்து அணி உடன் இந்திய அணி மோதுகிறது. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில், இதுவரை 8 லீக் ஆட்டத்திலும் அபார வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசை அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும், அரையிறுதி ஆட்டத்தில், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி உடன் இந்தியா மோத உள்ளது. இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வருகிற 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும், 1983 மற்றும் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IND vs NED: சாதனை படைக்கும் முனைப்பில் இந்தியா..! டஃப் கொடுக்குமா டச்சு அணி..!