ETV Bharat / sports

இந்தியா - இங்கிலாந்து தொடர் நடத்துவது உறுதி: சவுரவ் கங்குலி!

author img

By

Published : Nov 24, 2020, 8:36 PM IST

India will play five T20Is against England, says Ganguly
India will play five T20Is against England, says Ganguly

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவது உறுதியென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதால், இத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தேரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கங்குலி, "இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள், ஐந்து டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மட்டும் பங்கேற்பதால் இத்தொடரை நடத்துவது எளிமையான ஒன்று தான். இருப்பினும் பலர் கரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கினர். ஆனால் நாங்களும் முனேச்சரிக்கை நடவடிக்கையோடுதான் உள்ளோம்.

அதேசமயம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும். அப்போட்டியை அகமதாபாத் மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை நாங்கள் இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் : மும்பை வீரர் அஹ்மத் ஜஹூவிற்கு ஒழுங்காற்றுக் குழு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.