ETV Bharat / sports

'இங்கிலாந்து டீமுல இவுங்க இல்லையா' - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

author img

By

Published : Sep 24, 2019, 12:23 PM IST

eng vs Nz

லண்டன்: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தப்பட்டியளில் நட்சத்திர வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20க்கான அணியிலும், ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம்பிடிக்கவில்லை.

#ENGvsNZ2019
ஜானி பேர்ஸ்ட்டோ

இவர்களுக்குப் பதிலாக டாம் பான்டன் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் தங்களது முதலாவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ளனர். டொமினிக் சிபிலி இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஜானி பேர்ஸ்டோவுக்குப் பதிலாக இடம்பிடித்துள்ளார்.

#ENGvsNZ2019
ஜோஃப்ரா ஆர்ச்சர்

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. அதன் பின் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

டி20 தொடருக்கான இங்கிலந்து அணி:

இயன் மோர்கன்(கே), ஜானி பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், பாட் பிரவுன், சாம் குர்ரன், டாம் குர்ரன், ஜோ டென்லி, லீவிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், மாட் பார்கின்சன், ஆதில் ரஷீத், ஜேம்ஸ் வின்ஸ் .

இங்கிலாந்து டெஸ்ட் அணி:

ஜோ ரூட்(கே), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் குர்ரன், ஜோ டென்லி, ஜாக் லீச், சாகிப் மஹ்மூத், மத்தேயு பார்கின்சன், ஒல்லி போப், டொமினிக் சிபிலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் .

இதையும் படிங்க: தப்ப ஒத்துக்குறேன்; கப் கப்பல் ஏறினதுக்கு பிறகு வாயை திறக்கும் அம்பயர்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.