ETV Bharat / sports

தப்ப ஒத்துக்குறேன்; கப் கப்பல் ஏறினதுக்கு பிறகு வாயை திறக்கும் அம்பயர்

author img

By

Published : Jul 22, 2019, 8:29 PM IST

Updated : Jul 22, 2019, 9:33 PM IST

உலகக் கோப்பை இறுதி போட்டியின் போது ஓவர் த்ரோவிற்காக ஆறு ரன்கள் வழங்கியது தவறுதான் என அம்பயர் குமார் தர்மசேனா தெரிவித்துள்ளார்.

தப்ப ஓத்துக்குறேன்; கப் கப்பல் ஏறினதுக்கு பிறகு வாயை திறக்கும் அம்பயர்

ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு திருப்புமுனைகளுடன் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடந்து முடிந்தது. இதில், இங்கிலாந்து அணி பவுண்ட்ரிகள் கணக்கில் நியூசிலாந்து அணியிடம் வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று அசத்தியது. இப்போட்டி முடிவடைந்தாலும், ஐசிசியின் விதி, அம்பயரின் தீர்ப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகள் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

242 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், போல்ட் வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க ஸ்டோக்ஸ் முயற்சித்தார். அப்போது, நியூசிலாந்து வீரர் கப்தில் அடித்த த்ரோ ஸ்டோக்ஸின் பேட் மீது பட்டு பந்து பவுண்ட்ரிக்கு சென்றது.

Stokes
ஓவர் த்ரோ

இதனால், ஸ்டோக்ஸ் அவுட் ஆகுவதில் இருந்து எஸ்கேப் ஆனார். இது மட்டுமில்லாமல், ஓவர் த்ரோவிற்காக அம்பயர் குமார் தர்மசேனா மொத்தம் ஆறு ரன்களை வழங்கினார். இவரது இந்த தீர்ப்பு ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது.

இது குறித்து அம்பயர் குமார் தர்மசேனா கூறுகையில், "டி.வி.யில் போட்டியை பலமுறை ரிப்ளே பார்த்தப்பிறகு யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஓவர் த்ரோவிற்காக நான் ஆறு ரன்கள் வழங்கியது தவறுதான். அதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நான் வழங்கிய தீர்ப்புக்காக வருத்தப்படவில்லை.

அந்த சமயத்தில் என்னுடன் இருந்த மரைஸ் இராஸ்மஸ் அம்பயருடன் ஆலோசித்தப்பிறகே நான் இந்த முடிவை எடுத்தேன். இரு வீரர்களும் இரண்டாவது ரன்னின் போது க்ராஸ் ஆகிவிட்டார்கள் என 100சதவிகதம் ஊர்ஜிதாக நம்பியிருந்தேன். எங்களுக்கு மைதானத்தில் ரிப்ளே பார்ப்பதற்கு பிரமாண்ட டி.வி. ஓன்றும் கிடையாது. அந்த சமயத்தில் நான் தந்த முடிவுக்கு ஐசிசி என்னை பாராட்டியது" என்றார்.

முன்னதாக, குமார் தர்மசேனா ஓவர் த்ரோவிற்காக ஆறு ரன்கள் வழங்கியது தவறு என ஆஸ்திரேலியாவின் முன்னாள் அம்பயர் சைமன் டாஃபெல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை முடிந்த பிறகு தற்போது வாயை திறக்கும் குமார் தர்மசேனாவை ரசிகர்கள் இணையதளத்தில் சராமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

Intro:Body:

I admit it was wrong judgement - Kumara darmasena


Conclusion:
Last Updated :Jul 22, 2019, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.