ETV Bharat / sitara

'சூர்யா 40' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Jul 19, 2021, 12:59 PM IST

suriya
suriya

சென்னை: 'சூர்யா 40' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். எனவே தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. அப்போது சூர்யா கரோனா தொற்று காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அதனால் சூர்யா இல்லாத இதர காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து சூர்யா மார்ச் 18ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து 'சூர்யா 40' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இதனிடையே , கரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சமீபத்தில் படப்பிடிப்பு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதால், படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வரும் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: suriya 40: ரத்னவேலு வெளியிட்ட மிரட்டலான புகைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.