ETV Bharat / sitara

BB DAY 28: கன்டெண்ட் இல்லாமல் திணறும் பிக்பாஸ்.... கமல் ஹாசன் டாஸ்க்கில் நடக்கப் போவது என்ன?

author img

By

Published : Oct 30, 2021, 2:23 PM IST

வாரக் கடைசி நாளான இன்று (அக்.30) கமல் ஹாசன் எபிசோட் என்பதால், பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கியவர்களின் எத்தனை பேர் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து அவர் தெரிவிப்பார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி 27 நாள்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், என்ன தான் சுவாரஸ்யமாக இவர்கள் செய்தார்கள் என்றால், அது மிகப் பெரிய கேள்விக்குறியே.

பிக்பாஸ் பல முறை போட்டியாளர்களிடம் சுவாரஸ்யமாக எதாவது செய்யுங்கள் எனப் பலமுறை அறிவுறுத்திவிட்டர். இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் தினமும் பிக்பாஸ் எபிசோட் கன்டெண்ட் இல்லாமல் திணறி வருகிறது.

வழக்கம் போல் அறைத்த மாவைதான், நேற்றைய (அக்.29) எபிசோட்டில் அறைந்தார்கள். அன்றைய நாளில் சரியாக டாஸ்க் செய்யாத இருவரைத் தேர்வு செய்து சொல்லுமாறு, பிக்பாஸ் அறிவித்தார். வருண், அபினய் பெயரை இரண்டு தலைவர்களும் தேர்வு செய்தனர். இதனையடுத்து இருவரும் இரவு முழுவதும் நெரூப்புமுட்டி தீயை அணைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் பிக்பாஸ்.

நான் இனிமேல் சமைக்க மாட்டேன் என வீராப்பு பேசிய தாமரை நேற்று முதல் நபராக கிச்சனில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது அபினய்யிடம் கத்தி... கத்தி என அவர் கேட்க, அபினய் கோபப்பட்டார்.

கிராமம்/ நகரம் டாஸ்க் திரும்பவும் தொடங்கியது. இதில் கிராமம் தான் சிறந்தது என இரண்டு முறை இசைவாணி அறிவித்தார். நகரமா தான் சிறந்தது என ஒருமுறை வெற்றி பெற்றது.

எப்போது சுருதியைக் குத்திக் காண்பித்துக்கொண்டே தாமரை இருப்பதால், "சுருதியை குத்திக் காட்டிக்கிட்டே இருப்பதை நிறுத்து. இப்படியே செய்தால் உன்னை மக்களுக்குப் பிடிக்காமல் சென்றுவிடும்" என்றார் ராஜு.

ராஜு கொடுத்த அறிவுரையைக் கேட்டு, தாமரை மண்டையை மட்டும் ஆட்டினார்.

ஐக்கி, என்னை கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க பிக்பாஸ். என்னை யாரும் மதிக்கவில்லை என அழுகிறார். அவர் பட்டிமன்றத்தில் HUGGING முறை குறித்து, பேசியதைப் பலரும் விமர்சனம் செய்த நிலையில் தான் இவ்வாறு பேசினார் போல.

இன்று வாரக் கடைசி நாள் என்பதால், பிக்பாஸ் நாமினேஷனில் சிக்கியவர்களின் எத்தனை பேர் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து கமல் ஹாசன் தெரிவிப்பார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.