ETV Bharat / sitara

என்.எஸ்.கே ஸ்டைலில் பிளாக் பாண்டியின் கரோனா விழிப்புணர்வு பாடல்!

author img

By

Published : Apr 5, 2020, 7:56 PM IST

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

நடிகர் பிளாக் பாண்டி கரோனா விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை, வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேகமான சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் பிளாக் பாண்டி கரோனா விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை, கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதற்கு சினிமாத்துறையிலும், காவல்துறையிலும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் கரோனா விழிப்புணர்வு பாடல் குறித்தும், காவல்துறையுடன் பணியாற்றும் அனுபவம் குறித்தும் பிளாக் பாண்டி நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமான சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
இன்றைக்கு நாட்டில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. மக்கள் வெளியே செல்வதிலிருந்து பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மாதிரியான ஒரு சூழலில் கரோனா வைரஸ் குறித்து, ஒரு விழிப்புணர்வு பாடலை தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

கரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?

அந்தப் பாடல் எல்லா மக்களுக்கும் சென்றடையும் வகையில், கலைவாணர் என்.எஸ். கே ஸ்டைலில் நகைச்சுவையாக குழந்தை முதல் பெரியவர் வரை சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என்ன கஷ்டங்கள் இருந்தாலும், நகைச்சுவை உணர்வோடு அதை சொல்லும் பொழுது மக்களிடம் அதை ஈசியாக கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தேன்.

அதனால் சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்கள் எழுதினேன். இதனை நடிகர் மனோபாலாவிடம் தெரிவித்து, நாங்கள் இருவரும் சேர்ந்து, இந்தப் பாடலை உருவாக்கினோம். இன்னைக்கு இந்தப் பாடல் அனைவரிடமும் சென்றடைந்து இருக்கிறது.

சினிமாத்துறையில் பலரும் எனக்கு தொலைபேசி மூலம் வெளியே போக முடியாத இந்தச் சூழலிலும் விழிப்புணர்வு பாடல் தயாரித்துள்ளது குறித்து பாராட்டு தெரிவித்துவருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்பாடலின் ட்யூன் வித்தியாசமாக உள்ளதே அது குறித்து?

இந்தப் பாடலின் ட்யூன் நான் ஏற்கனவே வேறு ஒரு பாடலுக்குப் பயன்படுத்தி இருந்தேன். மிகவும் சாதாரணமாக எளிமையாக அனைவரும் பாட வேண்டிய ஒரு டியூனாக இருந்ததால் இந்த ட்யூனை பயன்படுத்தினேன். இந்த ட்யூனை என்னுடைய மகனே வீட்டில் பாடிக் கொண்டே இருப்பான். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் சென்றடையும், இந்த ட்யூனை பாடலுக்குப் பயன்படுத்தினேன்.

இந்தப் பாடலின் ட்யூன் வித்தியாசமாக உள்ளதே அது குறித்து

விழிப்புணர்வு பாடல் மூலம் உங்களுக்கு அரசு அதிகாரிகளின் பாராட்டுகள், ஊக்குவிப்புகள் ஏதேனும் கிடைத்ததா?

காவல் துறையினருடன் இணைந்து புதிதாக கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை நானே எழுதி கம்போஸ் செய்து உள்ளேன். அதுமட்டுமல்லாமல் இந்தப் பாடலை முழுக்க முழுக்க காவல் துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் பாட உள்ளார் என்பது தனிச்சிறப்பு.

இந்தப் பாடல் மூலம் உங்களுக்கு அரசு அதிகாரிகள் பாராட்டுகள் ஊக்குவிப்புகள் கிடைத்ததா?

இந்தப் பாடலின் பாடல் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. இன்னும் பாட ஆர்வமுள்ள காவல்துறையினரை, இந்தப் பாடல் பதிவில் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன். வரும் வாரங்களில், இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.

விழிப்புணர்வு பாடலுக்காக ஏதேனும் பணம் பெற்றுள்ளீர்களா?

பணத்தை எதிர்பார்த்து இதை நான் செய்யவில்லை. நமக்காக காவல்துறையினர் இரவும் பகலும் பணியாற்றுகிறார்கள். இந்தத் தருணத்தில் அவங்களும் வெளியில் போகக்கூடாத நிலைதான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. இருப்பினும் அவர்கள் நம்முடைய பாதுகாப்பிற்காக வெளியில் வந்து பணியாற்றுகிறார்கள்.

மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக வெளியில் வருபவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு, "ரிக்வெஸ்ட்" செய்து வெளியில் வராதீர்கள் என்று கூறுகிறார்கள்.

விழிப்புணர்வு பாடலுக்காக ஏதேனும் பணம் பெற்றுள்ளீர்களா?

இதையெல்லாம் பார்க்கும் போது காவல் துறைக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. இந்த நேரத்தில் என்னால் பணம் காசு கொடுத்து உதவ முடியாது. ஆனால் என் கலையின் மூலம் பொதுமக்களுக்கு உழைப்பையும், திறமையையும் கொடுத்து உதவ முடியும் என்பதால் நானும் எனது நண்பர்களும் ஒன்றிணைந்து முழுக்க, முழுக்க இலவசமாகவே இரவு பகலாக பாடல் தொடர்பான பணிகளை செய்துவருகிறோம்.

அனைவரும் வீட்டில் இருக்கும்போது, நீங்கள் பணியாற்றுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று பணியாற்றி வருகிறார்கள். அதேபோன்று தான் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை நாங்கள் செய்து கொண்டு வருகிறோம். இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்த காவல் துறைக்கு நன்றி.

அனைவரும் வீட்டில் இருக்கும் போது நீங்கள் பணியாற்றுகிறார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்

ஒரு நடிகராக மட்டுமே இருந்த நீங்கள் இப்பொழுது பாடலுக்கு இசை அமைக்கிறீர்கள் இதுகுறித்து?

எங்களது கலை குடும்பம். எங்கள் தாத்தா, எம்ஜிஆர் சிவாஜியுடன் நடித்துள்ளார். அதேபோன்று என் தந்தையும் சினிமாத்துறையில் தான் இருந்தார். தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக நானும் சினிமாவில் இருக்கிறேன். எனது தாயாரும், நீ சினிமாவில் தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஒரு நடிகராக மட்டுமே இருந்த நீங்கள் இப்பொழுது பாடல் இசை அமைக்கிறார்கள் இதுகுறித்து?

சினிமா என்ன கொடுக்கிறதோ அதை வைத்து நாம் குடும்பம் நடத்தலாம் என்று அறிவுரை கூறினார். அதனைப் பின்பற்றி நானும் சினிமா துறையில் இருக்கிறேன். பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி இப்போது ஓரளவுக்கு பெயர் சொல்லும் அளவில் இருக்கிறேன். நான் சிறு வயது முதல் நிறைய ஸ்டேஜ்களில் பாடி உள்ளேன்.

சந்திரபாபு பாடல்கள் அதிகமாகப் பாடுவேன் இப்பொழுது இசையமைப்பாளர்களும் தங்கள் படங்களில் பாடுவதற்கு, வாய்ப்புகள் தர முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சில இளைஞர்கள் வெளியில் வருகிறார்கள் அவர்களுக்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

இந்த வைரஸ் தொற்று பரவுவது கண்ணுக்குத் தெரியாது. எப்படி பரவுகிறது என்றும் தெரியாது. அதனால் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்காக வைத்து நம்மை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அல்லது நம் குடும்பத்திற்கு அதாவது நாம் அடங்கியிருக்க வேண்டும்.

சில இளைஞர்கள் வெளியில் வருகிறார்கள் அவர்களுக்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.

சென்னையில் வந்த வெள்ளப் பாதிப்பின் பொழுது உண்ண உணவு குழந்தைகளுக்குப் பால் கூட கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு அரசுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.