ETV Bharat / lifestyle

சாலையை அச்சு அசலாக பிரதிபலிக்கும் கூகுள் மேப்: புதிய அப்டேட் அறிமுகம்!

author img

By

Published : Dec 6, 2020, 12:36 PM IST

கலிபோர்னியா: செல்போனில் தொடர்ச்சியாக எடுக்கும் புகைப்படங்கள் மூலம் சாலையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வசதியை கூகுள் மேப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா
கலிபோர்னியா

மக்களின் வழிகாட்டியாகத் திகழும் கூகுள் மேப் செயலி, திக்குதெரியாத காட்டிற்கு நாம் போனாலும், சரியான இடத்திற்கு நம்மைப் பத்திரமாக கொண்டுபோய் சேர்த்துவிடும். இச்செயலி, பயனர்களின் தேவையை உணர்ந்து, அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கிவருகிறது.

அந்த வகையில், தற்போது உங்களின் தெருவைப் புகைப்படங்கள் மூலம் அச்சு அசலாக காட்டும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனர்கள் சாலையில் நடந்து செல்கையில் செல்போனில் படங்களைத் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். பின்னர், அவற்றை கூகுள் மேப் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கூகுள் மேப் செயலியில் உள்ள புதிய தொழில்நுட்பம் அவற்றை வரிசைப்படுத்தி, சாலையின் தோற்றத்தை அச்சு அசலாக கண்ணெதிரே கொண்டுவருகிறது. மற்றவர்கள், செயலியில் அந்தச் சாலையைப் பார்த்திட முடியும்.

முன்பு, சாலை வியூ புகைப்படங்களை எடுப்பதற்கு 360 டிகிரி கேமராக்கள் தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய அப்டேட், மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.