ETV Bharat / international

உலகளவில் கரோனா பாதிப்பு 24 விழுக்காடு குறைந்துள்ளது... ஆசியாவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு...

author img

By

Published : Aug 19, 2022, 6:11 PM IST

உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 24 விழுக்காடு குறைந்துள்ளது. இருப்பினும் ஆசிய நாடுகளில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லண்டன்: இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகம் முழுவதும் கடந்த வாரம் மட்டும் 50 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட 24 விழுக்காடு குறைவாகும். அந்த வகையில் ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காடும், மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

இதேபோல, மேற்கு பசிபிக் நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும், கரோனா உயிரிழப்பு விழுக்காடு அதிகரித்துவருகிறது. அந்த வகையில் மேற்கு பசிபிக் நாடுகள் உயிரிழப்பு விழுக்காடு 31ஆகவும், தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 12 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல உலகளவில் கடந்த மாதம் மட்டும் 35 விழுக்காடு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு மாதத்தில் 15,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது ஒரு எச்சரிக்கையாகும். ஆகவே, உலக நாடுகள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க வேண்டும். நாட்டு மக்களும் கரோனா பாதுகாப்பில் தங்களது அரசுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போடவில்லை செலுத்திக்கொள்ளுங்கள். பூஸ்டர் தடுப்பூசியை தவிர்க்காமல் செலுத்திக்கொள்ளுங்கள். குறிப்பாக 55 வயதிற்கு மேற்பட்டோர் சரியான கால இடைவெளியில் தடுப்பூசி, பூஸ்டர் செலுத்திக்கொள்வதில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

அதேபோல குழந்தைகள், இளைஞர்கள் தடுப்பூசிக்கு செலுத்திக்கொள்ளவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்றுக்கும் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. அதோடு புலக்கத்தில் உள்ள தடுப்பூசிகளும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுவது பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உலக சுகாதார அமைப்பு, உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 20 விழுக்காடு பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 7,500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே குரங்கம்மை வேகமாக பரவிவருகிறது. உலக நாடுகள் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும். தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

குரங்கம்மைக்கான தடுப்பூசிகள், மருத்துகளின் செயல்பாடுகள் குறித்த தரவுகள் நம்மிடம் குறைவாகவே உள்ளன. இந்த தொற்று பாதிப்புகளுக்கு பெரியம்மை தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரியம்மை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குரங்கம்மைக்கு பயன்படுத்தப்படும் தற்போதைய தடுப்பூசி 100 விழுக்காடு பயனளிக்காது என்பது புலனாகிறது. குரங்கம்மையின் குறித்து பயப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.