ETV Bharat / international

திரைப்படமாக உருவெடுக்கும் எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 10:38 AM IST

Elon Musk biopic
எலான் மஸ்க்

Elon Musk biopic: டெஸ்லா சிஇஓ எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு கஸ்தூரியின் வாழ்க்கை வரலாறு என்ற திரைப்படம் உருவாக உள்ளது. எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா: சமீப காலமாக பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என சினிமாவில் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ (CEO) எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளி வந்தன.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் (Walter Isaacson) புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். எலான் மஸ்க் தென்னாப்பிரிக்க நாட்டில் ஏழை குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஏ 24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான உரிமையை புத்தகத்தின் ஆசிரியரிடம் இருந்து தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஹாலிவுட் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி (Darren Aronofsky) இப்படத்தை இயக்க உள்ளார். இவர் 'பிளாக் ஸ்வான்', 'பை', 'தி வேல்' போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாழ்க்கை வரலாற்றில், எலான் மஸ்க்கின் தொழில் வாழ்க்கையைத் தவிர, தனிப்பட்ட வாழ்க்கையை படமாக காட்டப்படும் என தகவல்கள் வெளியாகின. எலான் மஸ்க் கடந்த 2002ஆம் ஆண்டு விண்வெளி சோதனைகளுக்காக space x ஐ நிறுவினார்.

கடந்த 2003ஆம் ஆண்டு மின்சார கார்களை உற்பத்தி செய்ய டெஸ்லா (Tesla) நிறுவனத்தை நிறுவினார். அதன்பிறகு சோலார் சிட்டி நிறுவனத்தை நிறுவினார். பின் கடந்த ஆண்டு டிவிட்டர் வலைதளத்தை வாங்கி, அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார்.

இதையும் படிங்க:சென்னையின் பிரபல திரையரங்கில் கிடா திரைப்படக் காட்சிகள் ரத்து - இயக்குநர் ஆதங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.