ETV Bharat / international

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! mRNA வகை தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இருவருக்கு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 5:38 PM IST

Noble
Noble

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ (mRNA) தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாக்ஹோம் : எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் உலம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர் பலி கொண்டது. தொற்று நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்க வழிவகுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெஸ்மன் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி பெருந்தொற்று பேரிடர் காலத்தில் சோதனை கட்டத்திலேயே இருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. கரோனா தொற்றுக்கு உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்த கூடிய வகையில் இருக்குமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றும் வகையில் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்தும் வேலையை இந்த வகை தடுப்பூசிகள் மேற்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பமானது அசல் வைரஸ் அல்லது பாக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான செல்களை அடிப்படையாக கொண்டது.

அதற்கு மாறாக, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பயன்படுத்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கரோனா தொற்றின் போது மாடர்னா, பைசர் பயோஎன்டெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது.

இந்தியாவில் GEMCOVAC-OM என்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தூண்டும் வகையில் பாக்டீரியா வைரஸ்களின் புரதத்தில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்.ஆர்.என்.ஏ வகை தடுப்பூசி தொழில்நுட்பத்திற்கு உதவியதாக இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : 5 தலைமுறையுடன் 105வது பிறந்த நாளை கொண்டாடிய எவர்கிரீன் தாத்தா..! கேக் வெட்டி கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.