ETV Bharat / international

பீகார் மாநிலத்தில் திருடிய குற்றத்துக்காக தாலிபான் பாணியிலான தண்டனை: கொடுரமாக தாக்கிய கும்பல்

author img

By

Published : Aug 8, 2023, 9:09 AM IST

பீகார் மாநிலத்தில் திருடிய குற்றத்துக்காக தாலிபான் பாணியிலான தண்டனை: கொடுரமாக தாக்கிய கும்பல்
பீகார் மாநிலத்தில் திருடிய குற்றத்துக்காக தாலிபான் பாணியிலான தண்டனை: கொடுரமாக தாக்கிய கும்பல்

பீகார் மாநிலம் கயாவில் திருடிய குற்றத்துக்காக இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, தாலிபான் பாணியிலான தண்டனை வழங்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கயா (பீகார்): பீகார் மாநிலம் கயாவில் இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து திருடிய காரணத்துக்காக கொடூரமாக தக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த இளைஞருக்கு தாலிபான் பாணியிலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

பீகார் மாநிலம் கயா பகுதியில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கொள்ளையடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் திருடப்பட்ட பொருட்களை அவரிடமிருந்து மீட்டு, அவரை பிடித்து அடி குழாயில் கட்டி வைத்து இரக்கமற்ற முறையில் தாக்கினர்.

மேலும் அவர் ஆடைகளை கலைந்து மொட்டையடித்ததோடு மட்டுமல்லாது அவரது மீசை, புருவங்களையும் அகற்றியுள்ளனர். இந்த காட்சிகள் கேமராவில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்.. ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு விசாரணை... உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளிக்கிழமை மதியம் (ஆகஸ்ட் 5) வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் பாரதி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், இளைஞன் மீது திருட்டு குற்றம் சாட்டப்பட்டதாகவும், இந்த விஷயத்தை காவல் துறையில் புகார் செய்வதற்குப் பதிலாக, மக்கள் தங்கள் கையில் எடுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் “ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக ஊடகங்கள் மூலம் இது பற்றி எனக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரிக்க எஸ்.எஸ்.பி. சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புக் குழுவில் நகரக் காவல் கண்காணிப்பாளர், நகர டிஎஸ்பி, கோட்வாலி காவல் நிலையத் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது சம்பவத்துக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உறிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தரப்படும்.

பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவர். காணொளியை சரிபார்த்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வீட்டிற்கு முன்பு மது அருந்தக் கூடாது என்று கூறியதால் கத்திக்குத்து; மீட்கச் சென்ற இளைஞர் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.