ETV Bharat / entertainment

Adipurush Box Office: சர்ச்சைகளை கடந்து பாக்ஸ் ஆபிஸில் அள்ளிய ஆதிபுரூஷ்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Jun 19, 2023, 5:07 PM IST

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ்

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இதுவரை 300 கோடியை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்: ஓம் ராவத் இயக்கத்தில், அஜய் அதுல் இசையில், பிரபாஸ், சாயிப் அலி கான், கீர்த்தி சனோன் கூட்டணி நடிப்பில் 3டி-யில் ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் கடந்த 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படமானது, இராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் பிரபாஸ் ராமனாகவும், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். ராமாயண கதையைத் தழுவி எதனையோ படங்கள், டி.வி.சிரியல்கள், என வந்தாலும் இப்படமானது மோஷன் கிராபிக்ஸ் உருவாக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படிங்க: Nursing Application: 2023-24-க்கான பி.எஸ்சி பி.பார்ம் படிப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்!

இப்படத்தின் டிரைலர் வெளியான போது படத்தின் vfx பற்றிய விமர்சனம் பல மோசமாக வந்த வண்ணம் இருந்தன. அதனால் படம் வெளியாகும் தேதியை படக்குழு சற்று தள்ளி வைக்கப்பட்டு பின்பு கடந்த 16ம் தேதி வெளியானது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அதன் பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களைச் சனிக்கிழமை பிற்பகல் ட்வீட் செய்தனர். அதில் ஆதிபுருஷ் வெளியான முதல்நாளே 140 கோடியும், இரண்டாவது நாளில் 100 கோடியும் வசூல் செய்தது. இந்நிலையிலும் இப்படமானது வெளியான மூன்றே நாட்களில் 300 கோடி வசூல் செய்தது குறுப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இம்பாசிபிள் லவ் ஸ்டோரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும் இந்த படத்தில் ராமாயண கதாபாத்திரங்களைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியானதும் இந்தியாவில் பல பகுதிகளில் குழப்பத்தை ஏற்படுத்திய வசனங்களை நீக்குவதாகப் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார். இப்படமானது இராமாயணத்தை அவமதிப்பதற்காக எடுத்தாக பலரால் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து வசன எழுத்தாளரான சுக்லா ஒரு ட்வீட்டில் ஆதிபுருஷில் எழுதப்பட்ட 4000 வரிகளுக்கும் மேல், வசனங்களில் எழுதி இருந்தாலும் அதில் 5 வரிகளால் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

மேலும் எனது வசனங்களுக்கு ஆதரவாக என்னால் வாதங்களை முன்வைக்க முடியும். ஆனால் இதனால் எற்பட்ட வலிகளை குறைக்க இயலாது. அதனால் நானும், இயக்குநரும் பேசி இப்படத்தில் சில வசனங்களைத் திருத்தி எழுதுவதாக முடிவு எடுத்துள்ளோம். திருத்தப்பட்ட வசனங்களை இந்த வாரப் படத்தில் சேர்க்கப்படும் என்றார்.

ஆதிபுருஷ் படத்திற்கு வட மாநிலங்களில் ஓரளவிற்கு வரவேற்பு இருந்தாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிக்கவில்லை என இணையத்தில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்விக்கு உதவி புரியும் விஜயின் செயல் வரவேற்கத்தக்கது: நடிகர் சரத்குமார் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.