ETV Bharat / state

Nursing Application: 2023-24-க்கான பி.எஸ்சி பி.பார்ம் படிப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்!

author img

By

Published : Jun 19, 2023, 12:12 PM IST

Nursing Application
பிஎஸ்சி பிபார்ம் ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்பான பி.எஸ்சி பி.பார்ம் பட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று காலை முதல் துவங்கியது.

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு இன்று (ஜூன்.19 ஆம் தேதி) காலை 10 மணி முதல் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது. மேலும் 28ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் உள்ள இடங்களின் விவரங்களையும், அந்தப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம். "தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி மற்றும் பிஓடி, பிபிடி, பி.பார்ம் , பிஏஎஸ்எல்பி ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.

மேலும் தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் வரும் 28ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் சென்றும் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளரமுறையில் நடத்தப்படும்.

2023-2024-ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் தமிழ்நாட்டில் 19 பட்டப்படிப்புகள் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,526 இடங்கள் இருக்கின்றன. தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டில் 14ஆயிரத்து 157 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் (அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகியப் பாடங்களை எடுத்துப் படித்து இருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுக்குரிய விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் எனவும், கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்" என மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Nursing Application: நர்ஸிங், பிபார்ம் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.