ETV Bharat / entertainment

துபாய் நிகழ்ச்சியில் கொலை மிரட்டல்? - முற்றுபுள்ளி வைத்த பூஜா ஹெக்டே தரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:26 PM IST

pooja hegde death threat: துபாயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான செய்தி வதந்தி என நடிகை பூஜா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Reports of Pooja Hegde receiving death threats in Dubai untrue
பூஜா ஹெக்டே கொலை மிரட்டல் விவகாரம்

ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் இயக்குநர் மிஷ்கினின் 'முகமுடி' படத்தின் மூலம் அறிமுகமாகி பின், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகை விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்நிலையில், துபாயில் கிளப் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பூஜா ஹெக்டே துபாய் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் நிகழ்ச்சியின் பாதியிலேயே பூஜா வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாலிவுட் புகைப்பட கலைஞர் வைரல் பயானி தனது சமூக வலைதளத்தில், “துபாயில் கிளப் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே மற்றும் மற்றவர்களிடேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் விளைவாக பூஜாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது” என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பூஜாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பூஜா மெளனம் காத்து வரும் நிலையில் பூஜா ஹெக்டே தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். “இந்த வதந்தி எங்கிருந்து பரவியது என எங்களுக்கு தெரியாது. இது முற்றிலும் ஆதாரமற்றது” என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து பூஜா இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையில், புகைப்பட கலைஞர் வைரல் பயானி தனது சமூக வலைதளத்தில் இருந்து அந்த பதிவை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை துறையில் இந்த ஆண்டு பூஜா ஏப்ரலில் வெளியான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் சல்மான் கானுடன் நடித்திருந்தார்.

அவரின் அடுத்த படமாக ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி, சித்தார்த் ராய் கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஷாஹித் கபூருடன் நடிக்கவிருக்கும் 'தேவா' திரைப்படம் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவா படத்தை தொடர்ந்து அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், உள்ளிட்ட பிரபல பாலிவுட் பிரபலங்கள் நடித்த ஹவுஸ்ஃபுல் தொடரின் 5வது பாகத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Unfollow செய்துவிடுங்கள்..! போலி கணக்கு விவகாரம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.