ETV Bharat / entertainment

"ஆதி அண்ணாவை பாக்கனும்..".. தேம்பி தேம்பி அழுத ரசிகை.. வைரலாகும் வீடியோ! - Hip Hop aadhi fan girl crying

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 8:13 PM IST

Hip Hop aadhi fan girl crying: பி.டி.சார் படம் புரமோஷனுக்காக கோவை வந்த நடிகர் ஹிப்ஹாப் ஆதியை நேரில் பார்த்த அவரது தீவிர ரசிகையான கல்லூரி மாணவி, சந்தோஷத்தில் கண்ணீர் மல்க அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிப் ஹாப் ஆதியை பார்த்து அழுத பெண் ரசிகை
ஹிப் ஹாப் ஆதியை பார்த்து அழுத பெண் ரசிகை (CREDIT -ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில், நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்து நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'பி.டி.சார்'.

ஹிப் ஹாப் ஆதி செய்தியாளர் சந்திப்பு (CREDIT -ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக கோவை வந்த ஹிப்ஹாப் ஆதி மற்றும் இயக்குநர் கார்த்திக் உட்பட படக்குழுவினர் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் ரசிகர்களிடையே கலந்துரையாடினர். அப்போது ஹிப்ஹாப் ஆதி கோவை Anthem பாடலையும், வாடி புள்ள வாடி பாடலையும் பாடினார்.

இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவருடன் இணைந்து பாடல்களைப் பாடி, பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி, “இப்படத்தின் புரமோஷனுக்காக சுற்றிக்கொண்டே இருப்பதால் யாரும் தூங்கவில்லை. எனவே, பார்ப்பதற்கு ஜாம்பி போல் இருக்கிறோம், இருந்தாலும் உள்ளுக்குள் எனர்ஜியாக இருக்கிறோம்.

இந்த படம் காமெடி படமாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தை வைத்திருக்கிறோம். பெரிய நட்சத்திர நடிகர், சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும். மேலும், ஓடிடி தொடர்பான கேள்விக்கு, அதுவும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது எனவும், திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

அதேநேரம், ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால், திரையரங்குகளுக்கு வருகின்ற மனநிலையும் சிறிது குறைந்துள்ளது எனவும், அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது, இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப்போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதில் பேசிய இயக்குநர் கார்த்திக், இப்படம் பெண்களுக்கு பிடிப்பதாக கூறுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது, அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்தப் படம் என்றார். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்த அவர் கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் இடையே அங்கு வந்த ஹிப் ஹாப் ஆதியின் தீவிர ரசிகையான கல்லூரி பெண், அவரை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுத நிலையில் “ஆதி அண்ணாவை பார்க்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்” எனவும், “அவரை போல ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவு” என கூறினார்.

அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை என அந்த இளம்பெண் கண்ணீர் சிந்த பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: டபுள் டக்கர் படத்தை தொடர்ந்து நடிகர் தீரஜ் நடிக்கும் பிள்ளையார் சுழி! - Pillaiyar Suzhi Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.