ETV Bharat / sports

கோடிகளில் புரளும் ஐபிஎல் அணிகள்..வெற்றி பெற்ற கேகேஆர் அணிக்கு பரிசு எவ்வளவு? - IPL 2024 Prize Money details

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 12:23 PM IST

How IPL Team Makes Money: ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள் விவரம் மற்றும் ஐபிஎல் அணிகளும் எவ்வாறு எல்லம் வருவாய் ஈட்டுகின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஐபிஎல் கோப்பையுடன் கேகேஆர் அணி வீரர்கள்
ஐபிஎல் கோப்பையுடன் கேகேஆர் அணி வீரர்கள் (Credit - IANS)

சென்னை: ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட கேகேஆர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 வது முறையாக கோப்பையைத் தட்டி சென்றது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரண்டு மாதம் திருவிழாவாக இருந்த இந்த இந்த தொடர் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையைப் பற்றி பார்ப்போம்:

1. முதலில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு வெற்றி கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

2. இறுதிப் போட்டிவரை தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணிக்கு ரன்னர்-அப் கோப்பையுடன் 12.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

3. அதே போல பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று 3வது இடத்தைப் பிடித்து வெளியேறிய ராஜஸ்தான் அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மறுபுறம் எலிமினேட்டர் போட்டியுடன் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 6.5 கோடி பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டது.

20 கோடி எப்படி சாத்தியம்? இப்போது நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் எழும். அதாவது இறுதிப்போட்டியில் விளையாடிய கேகேஆர் வீரர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடி, ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடி வாங்கப்பாட்டர். அப்படி இருக்கும் போது ஐபிஎல் தொடர் வெல்லும் அணிக்கு 20 கோடி மட்டும் தரப்படுகிறதே இது எப்படி சாத்தியம் என்று.

ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரையில், இறுதிப் போட்டிகளில் கிடைக்கக்கூடிய பரிசுத் தொகையானது முக்கியமல்ல. மாறாக ஒரு அணிக்கு கோப்பைதான் முக்கியம். ஏனென்றால், ஒரு அணி கோப்பையை வென்றால்தான் அந்த அணியின் பிராண்ட் வேல்யூ அதிகரிக்கும்.

இது குறித்தும் இன்னும் விரிவாகப் பார்ப்போம். இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என சொல்லக்கூடிய ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் BCCI தான் நடத்தி வருகிறது. வருடா வருடம் நடக்கக்கூடிய இந்த ஐபிஎல் தொடரின் மதிப்பு கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பின்படி 83 ஆயிரம் கோடி ரூபாய்.

டைட்டில் ஸ்பான்சர், கோ – ஸ்பான்சர், டிவி மற்றும் ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமம், டிக்கெட் விற்பனை இப்படி ஐபிஎல்லில் தொட்டது எல்லாமே பணம்தான். இதில் பொதுவான ஸ்பான்சர்களை 40 சதவீதம் பிசிசிஐயும், மீதமுள்ள 60 சதவீதம் ஐபிஎல் அணிகளும் பிரித்துக் கொள்ளும்.

டைட்டில் ஸ்பான்சர்ஷிப்: ஐபிஎல்-க்கான டைட்டில் ஸ்பான்சர்சிப்பை டாடா குழுமம் (Tata Group) 2028ஆம் ஆண்டு வரை வாங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 500 கோடி என மொத்தம் 2,500 கோடி ரூபாய்க்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது.

ஒளிபரப்பு உரிமம்: ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படும். இதனை 2027ஆம் ஆண்டு வரை ஸ்டார் நிறுவனமும், வியாகாம் நிறுவனமும் சுமார் 48,390 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன.

இதில் கிடைக்கும் லாபத்தை 60:40 என்ற வீதத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் பிரித்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தந்த ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூவை பொறுத்து இந்த தொகை வேறுபாடும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அணிக்கும் சுமார் 500 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.

ஸ்பான்சர்ஷிப்: இந்த ஸ்பான்சர்ஷிப் என்பது இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று ஐபிஎல் தொடருக்காக செய்யப்படும் ஸ்பான்சர்ஷிப், மற்றொன்று ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்.

டிக்கெட் விற்பனை: டிக்கெட் விற்பனை மூலமாகவும் ஒவ்வொரு அணியும் பணம் சம்பாதித்து வருகிறது. சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டின் விலையை ஐபிஎல் அணியே நிர்ணயிக்க முடியும்.அதில் கிடைக்கும் பணத்தை 80:20 என்ற கணக்கில் போட்டியை நடத்தும் ஐபிஎல் அணியும், கிரவுண்ட் அசோஷியேசனும் பிரித்துக் கொள்ளும்.

ஐபிஎல் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்: ஒவ்வொரு அணிகளுக்கும் தனித்தனியாக ஸ்பான்சர்ஷிப் இருப்பர். அந்த ஸ்பான்சர்ஷிப் யார் என்பதை அவர்களது ஜெர்சியில் இருக்கும் நிறுவனங்களின் பெயர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 500 கோடி வரை லாபம் ஈட்டுகிறது.

மெர்செண்டைஸ் சேல்ஸ்: ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அவரவருடைய அங்கீகரிக்கப்பட்ட ஜெர்சி, அவர்களது லோகோ பயன்படுத்தப்பட்ட வாட்ச், மொபைல் பேக் கேஸ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து ரூ.200 கோடி வரை வருமானம் ஈட்டி வருகின்றதாக கூறப்படுகிறது. இவ்வாறாக பல்வேறு வழிகளில் ஐபிஎல் அணிகள் வருமானம் ஈட்டி வருகின்றன.

இதையும் படிங்க: ஆரஞ்சு கேப் டூ ஆட்டநாயகன் வரை.. ஐபிஎல் 2024 விருது வென்ற வீரர்கள் பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.