ETV Bharat / entertainment

'துணிவு' அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்!

author img

By

Published : Nov 27, 2022, 8:48 AM IST

Updated : Nov 27, 2022, 12:59 PM IST

மஞ்சு வாரியர் குரலில் துணிவு பட பாடல்
மஞ்சு வாரியர் குரலில் துணிவு பட பாடல்

துணிவு திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் பாடல் பாடியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை: நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ’துணிவு’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

இந்நிலையில் ஜிப்ரான் இசையில் நடிகை மஞ்சு வாரியர் பாடல் பாடியுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது ட்வீட்டில் “ஜிப்ரான் இசையில் துணிவு பாடலின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வடிவேலு குரலில் "பணக்காரன்" பாடல் வெளியானது

Last Updated :Nov 27, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.