ETV Bharat / entertainment

பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்கமாட்டார்கள் - கே. ராஜன் பேச்சு!

author img

By

Published : Apr 24, 2022, 7:39 PM IST

பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள் - கே. ராஜன் பேச்சு!
பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள் - கே. ராஜன் பேச்சு!

பெரிய நடிகர்கள் சினிமாவை வாழவைக்கமாட்டார்கள் என்றும், அவர்களால் சினிமாவிற்கு எந்தப் பயனுமில்லையென்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள 'ஹே சகோ ' இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே.ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள்.

பெரிய நடிகர்களால் எந்தப் பயனும் இல்லை..!: பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ”யோகேஸ்வரன் பாடியதையும் ஆடியதையும் பார்த்தபோது அற்புதம் என்று சொல்லத்தோன்றியது. இறைவனின் அருள் பெற்று வந்த குழந்தை அவன். பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர்கள் படத்தை வாழ்த்துவதற்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால், சிறிய படங்களை வாழ்த்துவதற்குப் பெரும்பாலும் யாரும் வருவதில்லை. நாங்கள் தான் வருவோம்.

பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களால் சினிமாவிற்கு ஒரு பயனும் கிடையாது. 100 கோடி, 200 கோடி வாங்கும் நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க முடியாது. அவர்களால் சினிமாவை வளர்க்கவே முடியாது. சினிமா வாழ்வது சிறிய படத்தயாரிப்பாளர்களால் தான். ஒரு சிறிய தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் நூறு தயாரிப்பாளர்கள் திரையுலகில் உள்ளே வருவார்கள். ஆயிரம் குடும்பங்கள் திரையுலகில் வாழும்.

தெலுங்கு பக்கம் போகும் ஹீரோக்கள்: அதனால் தான் நாங்கள் சிறிய தயாரிப்பாளர்கள் வரவேண்டும், வளர வேண்டும் என்று நினைக்கிறோம். இப்போதெல்லாம் நம் ஹீரோக்கள் தெலுங்கு திரையுலகை வாழவைக்கப்புறப்பட்டுவிட்டார்கள். இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாரும் பெரிதாக வளர்ந்துவிட்டதுபோல், இவர்கள் தெலுங்கு பக்கம் போகிறார்கள். இன்னும் சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஸ்ரீதேவியின் கணவர் குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள். ஆனால், நானும் பேரரசுவும் சின்னப்படங்களையும் சின்ன தயாரிப்பாளர்களையும் வாழ்த்துகிறோம். அதனால், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

சின்ன தயாரிப்பாளர் முதலில் நன்றாக இருந்தால் இன்னொரு படம் தான் எடுப்பான். ஒரு தயாரிப்பாளர் வெற்றிபெற்று நன்றாக இருந்தால் தொழிலாளிகள் நன்றாக இருப்பார்கள்; இயக்குநர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் நன்றாக இருப்பார்கள்; நடிகர்கள் மிக மிக நன்றாக இருப்பார்கள். அதிக சம்பளம் எதுவும் கிடையாது.

பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள் - கே. ராஜன் பேச்சு!
பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள் - கே. ராஜன் பேச்சு!

குடிப்பதற்கு வழிகாட்டும் நாயகர்கள்..!: ஒரு யுகத்தைக் காப்பாற்றும் அளவுக்கு இன்று ஹீரோக்கள் சம்பளம் வாங்குகிறார்கள். அந்தப்பணத்தை வைத்துக்கொண்டு யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்கள் படிக்கச்சொன்னால் குடிக்கப் போகிறார்கள். குடிப்பதற்கு சினிமா கதாநாயகர்கள் வழிகாட்டுகிறார்கள். அவன் குடிக்கப் போகிறான். படிப்பில் தோல்வி கண்டால் மது அருந்தும் பாருக்குப் போகிறான்.

இந்தப்பாடலில் ஒரு நல்ல கருத்தைச்சொல்லி இருக்கிறார்கள். அதற்காகப் படத்தை, இயக்குநர் இயக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஓர் இயக்குநர் மனது வைத்தால் தான் ஒரு படம் நல்ல படமாக மாறும். படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இயக்குநர்கள் தான் காரணம். இந்தப் பிள்ளையைப் பாட வைத்தது நடனமாடி நடிக்க வைத்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் பிள்ளையை நான் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” எனப் பேசினார்.

இந்த விழாவில் எஸ் பேங்க் மேலாளர் தினேஷ்குமார், வாஸ்கோடகாமா படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜெம் டிவி சீதாபதி, ஒளிப்பதிவாளர் இளையராஜா, படத்தொகுப்பாளர் ராஜா, இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர், ஆல்பத்தில் நடித்துள்ள நடிகை சரண்யா ரவிச்சந்திரன், யோகேஸ்வரனின் தந்தை ரகுராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக வந்திருந்தவர்களை யோகேஸ்வரனின் தாயார் சங்கீதா வரவேற்றார்.

இதையும் படிங்க: இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி - பா.இரஞ்சித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.