ETV Bharat / city

மதுரையிலிருந்து நெல்லை வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

author img

By

Published : Jul 26, 2022, 7:41 AM IST

மதுரையிலிருந்து நெல்லை வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி
மதுரையிலிருந்து நெல்லை வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கான தொடர் ஜோதி மதுரையில் இருந்து நெல்லை வந்து சேர்ந்தது.

திருநெல்வேலி:இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்கும் இந்த போட்டியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது மதுரையில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி நேற்று(ஜூலை 25) இரவு நெல்லை வந்து சேர்ந்தது. நெல்லை சார் ஆட்சியர் ரிஷப் ஜோதியை பெற்று பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்தார். தொடர்ந்து இந்த உள் அரங்கில் நேற்று இரவு முழுவதும் தொடர் செஸ் போட்டிகள் நடைபெற்றது.

மதுரையிலிருந்து நெல்லை வந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி

இதில் மாணவர்கள் முதியவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு ஆர்வமுடன் விடிய விடிய செஸ் விளையாடினர். அதனைத் தொடர்ந்து இன்று(ஜூலை 26) காலை ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். பின்னர் சபாநாயகர் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பலூன்களை பறக்கவிட்டு பேரணியையும் தொடங்கி வைக்கிறார். இறுதியாக நெல்லையிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

இதையும் படிங்க:44th Chess Olympiad : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.