ETV Bharat / city

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

author img

By

Published : Jun 21, 2021, 7:14 PM IST

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் வரும் 24ம் தேதி பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருவண்ணாமலை : இது குறித்து மாவட்ட ஆட்சிய பா.முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

"பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேசுரர் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் , இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள் .

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது .

தற்போது , நோய்த் தொற்று பரவாமல் தடுத்து , மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( பேமே IV ) துறை , நாள் : 20.06.2021 - ன் படி , இந்த ஊரடங்கை 28.06.2021 காலை 06.00 மணி வரை , நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது .

கரோனா பரவல் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் , திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 24.06.2021 ( வியாழக்கிழமை ) 03.10 காலை முதல் , 25.06.2021 ( வெள்ளிக்கிழமை ) 12.55 மதியம் வரை , திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது .

எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

அரசின் நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.