ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @9 am

author img

By

Published : Jul 30, 2021, 8:58 AM IST

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

1. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு? மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

2. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் - மக்கள் குற்றச்சாட்டு

பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தில் பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய வீடுகள் கட்டப்படாமல் பழைய வீடுகள் சீரமைத்து தரப்படுகின்றன என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

3. பள்ளி மாணவர்களுக்கு அலகுத் தேர்வு எப்போது?

சென்னையில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் அலகுத்` தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாள்களில் மாற்றம்!

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாள்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

5. டெட்டனேட்டர்கள் வைத்து மீன்பிடித்த 3 மீனவர்கள் கைது!

ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் அருகே வெடி வைத்து மீன் பிடித்த மூன்று மீனவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

6. ராமேஸ்வரம் - பைஸாபாத் இடையே அதிவேக சிறப்பு ரயில் - மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு

ராமேஸ்வரம் - பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

7. தடுப்பூசி தொடர்பாக முறையான தகவல் இல்லை- பொதுமக்கள் சாலை மறியல்

கருமத்தம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி தொடர்பாக முறையாக தகவல் தெரிவிப்பதில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8. மலேசிய அமைச்சருடன் உரையாடல் - அரசுகளுக்கு பரிந்துரைகள் வழங்குவதாக கமல் உறுதி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.

9. TokyoOlympics: வில்வித்தை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

10. பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா முன்பிணை நிராகரிப்பு!

பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா முன்பிணை நிராகரிக்கப்பட்டது. ஆபாச பட வழக்கில் ஷெர்லின் சோப்ரா பெயரும் அடிபடுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.